மகாசிவராத்திரியை முன்னிட்டு கோவை சொக்கம்புதூரில் மயானக் கொள்ளை விழா - ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம்

கோவை மாவட்டம் சொக்கம்புதூர் சுடுகாட்டில் மகாசிவராத்திரியை முன்னிட்டு மயானக் கொள்ளை விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



கோவை: மகா சிவராத்திரி மற்றும் மாசி மாத அமாவாசை நிகழ்வையொட்டி பல்வேறு இடங்களில் நள்ளிரவில் மயான கொள்ளை நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.

கோவை சொக்கம்புதூர் பகுதியில் உள்ள சுடுக்காட்டிலும் ஆண்டுதோறும் மயான கொள்ளை நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் மயான கொள்ளை நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.



இதனையொட்டி சுடுக்காட்டில் மண்ணில் மாசாணியம்மன் சிலை செய்யப்பட்டது.



பின்னர் பம்பை, உடுக்கை, இசைக்க அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து மயானத்திற்கு வந்த கோவில் பூசாரி மாசாணி அம்மனை சுற்றி ஆக்ரோசமாக நடனமாடி பூஜை நடத்தினார்.



இதனை தொடர்ந்து மாசாணியம்மனின் இருதய பகுதியில் வைக்கப்பட்டிருந்த மனித எலும்பை வாயில் கடித்தபடி ஆக்ரோஷமாக நடனமாடினார்.



இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூசாரியின் ஆக்ரோஷ ஆட்டத்தை பார்த்து பக்தர்கள் ஆரவாரத்துடனும், பரவசத்துடனும், மாசாணியம்மனை வழிபட்டனர்.

இந்த நிகழ்விற்கு பின்னர் மாசாணியம்மன் சிலையில் இருந்து மண் எடுத்து செல்லப்பட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

மகா சிவராத்திரியை முன்னிட்டு நள்ளிரவில் நடத்தப்படும் மயான கொள்ளை நிகழ்வில் கலந்து கொண்டு வழிப்பட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என நம்பப்படுகிறது.

இதனை தொடர்ந்து நாளை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருக்கல்யாண வைபவம் மற்றும் குண்டம் இறங்கும் நிகழ்வு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...