கோவை சுந்தராபுரத்தில் குப்பைமேடாக காட்சியளிக்கும் சிறுவர் பூங்கா!

கோவை சுந்தராபுரம் அருகே செயல்பட்டு வரும் சிறுவர் பூங்காவில் குப்பைகள் தேங்கியுள்ள நிலையில், உடனடியாக குப்பைகளை அகற்றி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் சுந்தராபுரம் அருகே குப்பைமேடாக காட்சியளிக்கும் சிறுவர் பூங்காவை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுந்தராபுரம் அடுத்த மதுக்கரை சாலையில் உழவர் சந்தை அருகே சிறுவர் பூங்கா செயல்பட்டு வருகிறது. தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக அங்கு செல்வது வழக்கம்.

மேலும் அதிகாலை 5 மணியில் இருந்து 8 மணி வரை நடைப்பயிற்சி செய்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதுதவிர மாலை நேரங்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக வருவார்கள்.

இந்த நிலையில் சிறுவர் பூங்காவில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடப்பது அங்கு வரும் பொதுமக்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. மரங்களில் இருந்து உதிர்ந்து விழும் இலைகள், காய்ந்து சருகுகளாக ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சுந்தராபுரம் பகுதியை பொறுத்தவரை பொழுது போக்குவதற்கு என்று குறிப்பிட்ட இடம் கிடையாது. இந்த ஒரு பூங்கா மட்டுமே உள்ளது.

ஆங்காங்கே குப்பைகள் குவியல் குவியலாக காட்சி அளிக்கிறது. இங்கு வாரத்திற்கு ஒரு முறை தான் குப்பைகளை அகற்றுகின்றனர். குப்பைகள் தேங்கும் காரணத்தால் பூங்காவிற்குள் கொசுக்கள் அதிகரித்துள்ளது, என்றனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...