மின்வேலியில் சிக்கிய காட்டுயானை - நீலகிரி வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்பு!

கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் மின்வேலியில் சிக்கி உயிருக்கு போரடிய காட்டு யானையை வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றி வனப்பகுதிக்குள் விட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நீலகிரி: கேரளா, கர்நாடக மாநில எல்லையில் முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ள கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் ஆயிரக்கணக்கான காட்டு யானைகள் சுற்றி திரிந்து வருகின்றன.

இந்த நிலையில் ஓம்கர் வன சரகத்திற்கு உட்பட்ட பார்கி வன பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானை ஒன்று, அருகில் உள்ள தனியார் தோட்டத்திற்குள் புகுந்தபோது மின்வேலியில் சிக்கியது. அப்போது மின்சாரம் தாக்கியதில் மயங்கி அந்த யானை கீழே விழுந்தது.

அதனை கண்ட நிலத்தின் உரிமையாளர் உடனடியாக மின்வேலிக்கான மின் இணைப்பை துண்டித்துவிட்டு, சம்பவம் குறித்துவனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.



விரைந்து வந்த வனத்துறையினர், மயங்கி விழுந்த யானையின் காலில் சுற்றி இருந்த மின் கம்பிகளை வெட்டி அகற்றினர்.



ஆனால், யானையால் எழுந்து நிற்க முடியவில்லை.



பின்னர் ஜெசிபி எந்திரத்தின் உதவியுடன் சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக போராடி அந்த யானைக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளித்து வனத்துறையினர் காப்பாற்றினர்.



இதனைத் தொடர்ந்து, அந்த யானை வெற்றிகரமாக வனப்பகுதிக்குள் நடந்து சென்றது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...