"ஐ திங்க் பிங்க்" புற்றுநோய் மற்றும் பெண்கள் முன்னேற்றம் குறித்த சந்திப்பு நடைபெற்றது

கோவை ரோட்டரி கிளப், தி ஆர்க் பவுன்டேஷனுடன் இணைந்து புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை "ஐ திங்க் பிங்க்" என்ற பெயரில் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் நடத்தியது. இந்நிகழ்ச்சியில், 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.



குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையின் புற்றுநோய் மருத்துவர் கார்த்திகா சிவப்பிரகாசம் மகளிரை பாதிக்கும் புற்றுநோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவர் கூறுகையில், புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துள்ளது. முன்னொரு காலத்தில் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களே மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது இளம்பெண்களையும் இந்த நோய் விட்டுவைப்பது இல்லை.

ஆரப்பத்திலேயே கண்டறிவதன் மூலம் இந்த நோயை முற்றிலுமாக குணப்படுத்தலாம். வருடத்திற்கு ஒரு முறை பெண்கள் புற்றுநோயை கண்டறிவதற்கான ஆய்வுகளுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்" என்றார். 

இதுகுறித்து பிஎஸ்ஜி மருத்துவமனை மருத்துவர் மதுலிகா விஜயகுமார் கூறுகையில், "வருமுன் காப்பதே சிறந்தது". இந்த நோயில் இருந்து பாதுகாத்துக்கொள்வதில் சிறந்த முறை என்பது தடுப்பூசிகளை பயன்படுத்துவதே ஆகும். மேற்கு நாடுகளில் எச்ஐவி, எய்ட்ஸ் போன்ற நோய்களுக்குக் கூட தடுப்பூசிகள் பயன்படுத்துவது தற்போது சாதாரணமாகிவிட்டது. ஆனால் இந்தியாவில் இதுவரை இது பிரபலமாகவில்லை என கூறினார்.

இந்நிகழ்வில் தொடர்ந்து நடந்த கேள்வி- பதில் நிகழ்ச்சியில் மாணவிகளின் கேள்விகளுக்கு மருத்துவர்கள் பதிலளித்தனர்.

அப்போது ஒரு மாணவி, புற்றுநோய் என்பது பரம்பரை நோயா என தனது ந்தேகத்தை எழுப்பினார். அதற்கு பதிலளித்த மருத்துவர் கார்த்திகா, "சில வகை புற்றுநோய்கள் பரம்பரை நோயாக இருக்கும். புற்றுநோய் பாதித்த நோயாளிகளை பரிசோதிக்கும் பொழுது நாங்கள் அவருடைய குடும்பத்தின் மருத்துவ வரலாற்றை ஆய்வு செய்வோம்" என்றார்.

வேரொரு மாணவி புற்றுநோயை கீமோதெரபி சிகிச்சை மூலம் முற்றிலுமாக குணமாக்க முடியுமா என கேட்டார். அதற்கு பதிலளித்த மருத்துவர் கார்த்திகா கூறுகையில், அது புற்றுறோயால் பாதிக்கப்பட்டவருக்கு நோய் இருப்பதை எந்த நிலையில் கண்டறிகிறோம் என்பதைப் பொருத்து கீமோதெரபி அளிக்கப்படும். இதன் மூலம் 90 முதல் 95 சதவிகிதம் வரை புற்றுநோயை குணப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளது. இதனால், நோயாளியின் ஆயுள் கூடுகிறது. ஆனால், புற்றுநோய் மருவடியும் வருமேயானால் அது பிரச்சனைகளை உருவாக்கும்" என்றார்.

எந்த வயதில் பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் என மாணவிகள் தரப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மருத்துவர் மதுலிகா, முந்தைய காலங்களில் 40 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயம் இருந்தது. ஆனால் தற்போது இப்புற்றுநோய் இளம் வயது பெண்களிடத்திலும் வரத்துவங்கியுள்ளது. என்னிடம் 28 வயதே ஆன பெண் ஒருவர் மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த கேள்வி பதில் நிகழ்ச்சி முடிந்தவுடன் தஸ்லிமா நஷ்ரீன் என்னும் திருநங்கை தனது மேடைக்கு வந்து அவருடைய வாழ்க்கை மற்றும் பயணங்கள் குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். அவர் மாணவிகளை மூன்றாம் பாலின்த்தவர்களின் முன்னேற்றத்திற்கான பணிசெய்யுமாறு அறிவுருத்தினார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...