அறிவித்த ஊதியம் ரூ.648.. ஆனா கிடைப்பதோ ரூ.421 தான்..! - கோவை மேயரை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்!

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ரூ.648 சம்பளம் என அறிவிக்கப்பட்ட நிலையில், ரூ.421 மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டதால் அதிருப்தி அடைந்து, மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயரை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: மாமன்றத்தில் நிறைவேற்றிய சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து, கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயரை தூய்மை பணியாளர்கள், முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாநகராட்சியில் உள்ள தூய்மை பணியாளர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாவட்ட ஆட்சியர் அறிவித்த 721 ரூபாய் சம்பளத்தை வழங்கிட வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டம் மேற்கொண்டனர்.

இந்த போராட்டத்தை தொடர்ந்து பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது. இந்த நிலையில் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்கப்பட்டது.

கோவை மாநகராட்சி விக்டோரியா மஹாலில் கடந்தாண்டு டிசம்பர் 30 ஆம் தேதி நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் கோவை மாநகராட்சியின் சார்பில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் நலன் கருதி அவர்களுக்கு வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் ரூ. 648 என சம்பளத் தொகையை உயர்த்தி வழங்கிட சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



மாநகராட்சி மன்றத்தில் 648 ரூபாய் என அறிவித்துவிட்டு, 421 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதற்கு அதிருப்தி தெரிவித்த தூய்மை பணியாளர்கள், கோவை மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்று வரும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில். மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மற்றும் மேயர் கல்பனா ஆனந்தகுமார் ஆகியோரை சூழ்ந்தனர்.



தொடர்ந்து மாமன்றத்தில் அறிவித்த சம்பளம் ஏன் வழங்கவில்லை என ஆணையாளரிடம் கேள்வி எழுப்பினர்.



பின்னர் தூய்மை பணியாளர்கள் அனைவரும் ஆணையர் மற்றும் மேயரை முற்றுகையிட்டு அறிவித்த சம்பளம் கைக்கு வர வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்த சம்பளம் வேண்டும் எனவும் வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கூறுகையில், இ.எஸ்.ஐ, பி எப்., பணம் பிடித்தது போக தான் தற்போது சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் தூய்மை பணியாளர்கள் தீர்மானத்தில் அறிவித்த சம்பளம் கைக்கு வரவேண்டும் என தெரிவிப்பதாக கூறினார்.

இதையடுத்து, தூய்மை பணியாளர்கள் கூறுகையில், மாமன்றத்தில் அறிவித்த 648 ரூபாய் சம்பளம் தராமல் சம்பளத்தை குறைத்து தந்துள்ளனர். தற்போது 415 தான் கைக்கு வருகிறது. இரண்டு நேரம் வேலை வாங்குகின்றனர். தொழிலாளர்களை ஏமாற்றும் போக்கில் மாநகராட்சி செயல்படுகிறது.

தொழிலாளிகளின் உழைப்பை மாநகராட்சி சுரண்டுகிறது. தற்போது கூட்டமைப்பில் பேசி முடிவெடுத்து மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம், என்று எச்சரித்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...