கோவையில் கல்லூரி மாணவர்கள் - வட மாநில தொழிலாளர்கள் இடையே மோதல்! - வீடியோ வைரல்

சூலூர் அருகே தனியார் கல்லூரி விடுதியில் கூடுதலாக உணவு கேட்டதில் ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவர்கள் - வட மாநில தொழிலாளர்கள் உருட்டு கட்டைகளை கொண்டு தாக்கி கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே வடமாநில தொழிலாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி விடுதியின் உணவகத்தில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று, இரவு உணவு உட்கொள்ள வந்த மாணவர்கள், அசைவ உணவு அதிகமாக கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பணியில் இருந்த வட மாநில தொழிலாளர்கள் மறுக்க, இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.



வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறிய நிலையில் விறகுக்காக பயன்படுத்தப்படும் கட்டைகளை எடுத்து கொண்டு இருதரப்பும் மாறி மாறி தாக்கி கொண்டனர்.



இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த மாணவிகள் அதனை தங்களது செல்போனில் படம் பிடித்தனர்.

தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் போலீசார் இரு தரப்பையும் சமாதானமும் செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கல்லூரி வளாகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் திரைப்பட சண்டை காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு மாணவர்கள் மற்றும் வட மாநில தொழிலாளிகள் மோதிக் கொள்ளும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே திருப்பூரில் வட மாநில தொழிலாளர்கள் உள்ளூர் தொழிலாளர்களை தாக்கும் வீடியோ வைரலான நிலையில் தற்போது இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...