மீண்டும் ஏறுமுகத்தில் ஆட்டோமொபைல் தொழில் - சந்தை மதிப்பீட்டாளர்கள் கருத்து!

நடப்பாண்டில் ஆட்டோமொபைல் தொழில் தொய்விலிருந்து மீண்டு வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைத்துள்ளதாக சந்தை மதிப்பீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் தேசிய அளவில் வாகன விற்பனை உயர்ந்திருப்பதாக வாகன முகவர் சங்கத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.


கோவை: கொரோனா பெருந்தொற்றால் கடந்த மூன்று வருடங்களாக முடங்கி கிடந்த தொழில்துறை சமீபத்தில் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றது. அதில், முக்கியத்துவம் வாய்ந்த தொழில்களில் ஒன்றாக இருப்பது ஆட்டோ மொபைல் வர்த்தகம்.

குறிப்பாக கோவிட் பெருந்தொற்றால் தொழில்கள் செய்ய முடியாத நிலையில், ஆட்டோ மொபைல் தொழில் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு உற்பத்தி குறைப்பு மற்றும் விற்பனை மந்தம் ஆட்டோமொபைல் தொழில் வளத்தையே ஆட்டிப் படைத்தது.



இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு ஜனவரியை ஒப்பிடும்பொழுது 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆட்டோ மொபைல் தொழிலுக்கு ஓரளவுக்கு கை கொடுத்து அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றிருக்கின்றது. அந்த வகையில், டெல்லியில் தேசிய அளவில் வாகன விற்பனை உயர்ந்திருப்பதாக வாகன முகவர் சங்கத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.

இரு சக்கர விற்பனை முந்தைய ஆண்டை விட நடப்பாண்டில் 14 % விற்பனை உயர்ந்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் இது அதற்கு முந்தைய ஆண்டுகளை விட 8 % குறைவு எனவும், 3 சக்கர வாகன விற்பனை பொறுத்தவரையில் கொரோனாவுக்கு முந்தைய நிலையை விட 3 சதவிகிதம் அதிகரித்துள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.



அதேபோல், பயணிகளின் கார் விற்பனை 22 சதவிகிதம் அதிகரித்துள்ளது. வர்த்தக வாகன விற்பனை 16 % உயர்ந்துள்ளது. பயணிகள் கார் விற்பனை சிறப்பாக நடைபெறுகிறது. அதேநேரத்தில் சிறிய கார்களின் விற்பனை சற்று தோய்வடைந்துள்ளது.



ஒட்டுமொத்தமாக பார்க்கும் பொழுது புள்ளிவிவரம் சற்று ஏறி இறங்கினாலும் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் தொழில் துறை என்பது மெல்ல மெல்ல வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்துவைத்துள்ளது.

கோவை, சென்னை போன்ற பெரு நகரங்களில் தொழில் நிறுவனங்களுக்கு ஆட்டோ மொபைல் சேவை என்பது அத்தியாவசியம் என்பதனால் இனிவரும் காலங்களில் சிறப்பான இடத்தை நோக்கி ஆட்டோமொபைல் வர்த்தகம் நகரும் என்று சந்தை மதிப்பீட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...