மேட்டுப்பாளையம் அருகே பேருந்தை வழிமறித்த காட்டுயானைகள் - அச்சத்தில் உறைந்த பயணிகள்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வெள்ளியங்காடு மஞ்சூர் சாலையில் காட்டு யானைகள் அரசு பேருந்தை திடீரென வழிமறித்ததால் பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.



கோவை: மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்திற்குச் செல்ல கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு வழியாக மஞ்சூர் சாலை ஒன்று உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் பயணிக்கும் இந்த பகுதியில், 30க்கும் மேற்பட்ட மலைகிராமங்கள் மற்றும் பில்லூர் அணையும் உள்ளது.

மேலும், நீலகிரி மாவட்டத்திற்கு இது மூன்றாவது வழியாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.



இந்நிலையில், அங்குள்ள மக்களின் பயன்பாட்டிற்காக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கோவையில் இருந்து வெள்ளியங்காடு மஞ்சூர் சாலை வழியாக பில்லூர் அணைக்கு சென்ற அரசு பேருந்து ஒன்றினை காட்டு யானைகள் கூட்டம் திடீரென வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இரண்டு குட்டிகளுடன் இருந்த ஐந்து காட்டு யானைகள் கூட்டம் திடீரென சாலைக்கு வந்து அரசு பேருந்தை வழிமறித்து சாலையின் நடுவே நின்றதால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர்.



இதனால், அடுத்தடுத்து பின்னால் வந்த வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. வெகுநேரம் பேருந்தினை முன்னேறி செல்ல விடாமல் சாலையிலேயே நடமாடிய யானைகள், பின்னர் வெகுநேரம் கழித்து காட்டுக்குள் சென்றன.



இதையடுத்து, மீண்டும் பேருந்து புறப்பட்டு சென்றது. சாலையின் நடுவே யானைக்கூட்டம் வழிமறித்து நின்ற சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...