வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழலில் கதிரியக்க ஐசோடோப்பு மற்றும் தடங்காண் முறையின் பயன்பாடுகள் குறித்து தேசிய கருத்தரங்கம்

வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழலில் கதிரியக்க ஐசோடோப்பு மற்றும் தடங்காண் முறையின் பயன்பாடுகள் குறித்த இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் இன்று கோவை தமிர்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் தொடங்கப்பட்டது.

கருத்தரங்கின் அமைப்பு செயலாளரும், மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவருமான கோ.அருள்மொழிச்செல்வன் இந்நிகழ்வில் பங்கேற்ற விஞ்ஞானிகளையும், மாணவர்களையும் வரவேற்று மண் வளத்தை கண்டறிய கதிரியக்க ஐசோடோப்பு மற்றும் தடங்காண் முறையின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைத்தார். இக்கருத்தரங்கில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 150 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக இயற்கை வள மேளாண்மை இயக்குநரகத்தின் தனி அலுவலர் கி.குமார், சிறப்பு விருந்தினர்களான புதுதில்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி குழமத்தின் முன்னாள் துணைப் பொது இயக்குநர் (கல்வி) சி.தேவகுமார் மற்றும் மும்பை அணு அற்றல் துறையின் இணைச் செயலாளர் மெர்வின் அலெச்காண்டர் ஆகியோரை அறிமுகப்படுத்தினார்.

மேலும், அவரது உரையில் மண்ணியல் துறை விஞ்ஞானிகளிடம் கதிரியக்க ஐசோடோப்பு முறையில் அராய்ச்சியை மேம்படுத்தவும் அதே துறையில் பணியாற்றும் வல்லுநர்களோடு இணைந்து பணியாற்றவும் கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து, முன்னாள் துணை பொது இயக்குநர் சி.தேவகுமார் தனது தொடக்க உரையில் பருவநிலை மாற்றத்தில் ஐசோடோப்பின் பங்கு, பிறழ்வு இனப்பெருக்கம் மற்றும் மூலக்கூறு இனப்பெருக்கம், ஒருங்கிணைந்த பயிர்ச்சத்து, பயில் சுழற்சி திட்டங்கள் மற்றும் நீர் மேலாண்மை முறைகளை ஒருங்கிணைத்து அதன் வழியாக பயிருக்கு கிடைக்கும் சத்துக்கள் மற்றும் மண்ணில் உள்ள சத்துக்களின் இருப்பு நிலைகளை கணக்கிடல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தடங்காண் முறை உபயோகத்தைப் பற்றி கூறினார்.



தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவரும், இன்னாள், மும்பை அணு ஆற்றல் துறையின் இணை செயலாளருமான மெர்வின் அலெக்சாண்டர் தமது தலைமை உரையில் வேளாண்மை, மருத்துவம் மற்றும் நீர் மேலாண்மை போன்ற பல துறைகளில் கதிரியக்க அணுக்களின் பயன்பாடு குறித்து எடுத்துரைத்தார்.

மேலும், அறுவடை பின்சார்ந்த தொழில்நுட்பங்களில் இவற்றின் இன்றியமையாமையை வலியுறுத்தினார். 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணை வேந்தர் கு.ராமசாமி கருத்தரங்க மலரை வெளியிட்டு தலைமை உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், இந்தியாவில் 82 சதவிகித காய்கறிகள் மற்றும பழங்கள் கதிர்வீச்சு இனப்பெருக்க முறையின் மூலமாக மட்டுமே இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன என்பதை வெளிப்படுத்தினார்.

இக்கருத்தரங்கின் நிரைவாக அமைப்பு செயலாளரும், மண்ணியல் துறை பேராசிரியருமான ச.மீனா அனைவருக்கும் நன்றியுடிர வழங்கினார்.

Newsletter

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...