மருதமலை கிரி வலப்பாதையில் வழிமறித்த யானை - பாசமுடன் வழி அனுப்பிய பக்தர்கள்

கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோவிலுக்கு கிரிவலம் சென்ற போது பக்தர்களை வழிமறித்த யானையை பாசத்தோடு பக்தர்கள் வழியனுப்பி வைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.


கோவை: யானையை போ பா...போ பா...போங்க.. போ சாமி... என பாசமுடன் முருக பக்தர்கள் வழியனுப்பும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. வனப்பகுதியில் உள்ள யானைகள்,மான்கள், காட்டுப்பன்றிகள் அவ்வப்போது வெளியே உலா வருகின்றன.

இந்நிலையில் மருதமலை முருகன் கோயிலுக்கு மாலை அணிந்த பக்தர்கள் வனப்பாதை வழியாக கிரிவலம் மேற்கொண்டனர். அப்போது வனப்பகுதியிலிருந்து வந்த யானை அவர்களை வழிமறித்தது.

பக்தர்கள் இன்று மாலை பயணித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு காட்டு யானை வந்திருக்கின்றன. பக்தர்கள் நடைபாதையில் யானை கடந்து சென்றிருக்கின்றன. அப்போது யானையை பார்த்த சிலர் புகைப்படம் எடுக்க முயன்றிருக்கின்றனர். யானை தடுப்பு சுவரில் ஏறி கிரிவல பாதையில் யானை நடந்து சென்றது.



அப்போது யானையை போ பா... போ பா... போங்க... போ சாமி... என பாசமுடன் முருக பக்தர்கள் வழியனுப்பினர்.

இந்த காட்சி அங்குள்ள பக்தர்களால் படம் பிடிக்கப்பட்டு, இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...