கோவை ஈஷா யோகா மையத்தில் பிப்.18-ல் மகா சிவராத்திரி விழா - பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு!

மகா சிவராத்திரி தினத்தையொட்டி வரும் 18ஆம் தேதி கோவை ஈஷா மையம் சார்பில் சத்குரு ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் சிவராத்திரி விழாவை பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடுகள் தீவிரம்.



கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில் வரும் பிப்ரவரி 18-ம் தேதி சிவராத்திரி விழா பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகமெங்கும் மக்கள் விரும்பி நேரலையில் காணும் நிகழ்ச்சிகளில் கடந்த ஆண்டு ஆஸ்கர் மற்றும் கிராமி விருது வழங்கும் விழாக்களை பின்னுக்கு தள்ளிய ஈஷாவின் மகா சிவராத்திரி விழா இந்த வருடம் பிப்ரவரி 18-ம் தேதி மேலும் பிரமாண்டமான முறையில் கொண்டாடப்பட உள்ளது.

ஆன்மீகத்திலும் பக்தியிலும் ஊறி திளைத்த கலாச்சாரமாக நம்முடைய இந்திய கலாச்சாரம் திகழ்கிறது. திருவிழாக்களின் தேசமாக விளங்கும் நம் இந்திய தேசத்தில் மகா சிவராத்திரி விழா என்பது கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடப்படும் விழாவாக உள்ளது.

யோக அறிவியலுடன் மிகவும் தொடர்புடைய இவ்விழா கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.



அந்த வகையில், 2023ஆம் ஆண்டிற்கான மகா சிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 18ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.



சத்குரு ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் நடைபெறும் இவ்விழா தியானலிங்கத்தில் நிகழ்த்தப்படும் பஞ்சபூத ஆராதனையுடன் தொடங்கும்.



லிங்க பைரவி தேவியின் மகா யாத்திரை, உள்நிலையில் பரவசத்தில் ஆழ்த்தும் சக்திவாய்ந்த தியானங்கள், சத்குருவின் சத்சங்கம், கண்ணை கவரும் ஆதியோகி திவ்ய தரிசன காட்சி, பாரத பாரம்பரியத்தை பறைசாற்றும் புகழ்பெற்ற கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் விழா விடிய விடிய களைகட்ட உள்ளது.



மகா சிவராத்திரி இரவில் இருக்கும் கோள்களின் அமைப்பு, மனித உடலில் இயற்கையாகவே சக்தியை மேல் நோக்கி எழ செய்வதற்கு ஏதுவாக உள்ளது. எனவே, இந்த இரவில் ஒருவர் முதுகுதண்டை நேராக வைத்திருந்து விழிப்பாகவும், விழிப்புணர்வாகவும் இருந்தால் ஆன்மீகம் சார்ந்த மகத்தான பலன்களை பெற முடியும்.

இவ்விழா ஈஷாவின் அதிகாரப்பூர்வ யூ-டியூப் சேனலான Sadhguru Tamil–ல் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படும். மேலும், தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மராத்தி என பல்வேறு மாநில மொழிகளில் முன்னணி தொலைக்காட்சிகள் மற்றும் யூ - டியூப் சேனல்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

கடந்தாண்டு ஈஷா மகாசிவராத்திரி விழாவை சுமார் 14 கோடி பேர் நேரலையில் பார்த்து உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...