ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் குண்டம் திருவிழா..! - தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் நடைபெற்ற குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.



கோவை: பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோயில் தமிழகத்தின் பிரச்சித்திபெற்ற கோயில்களில் முக்கியமானது. இந்தக் கோயிலில் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று கொடியேற்றத்துடன் தொடங்கும். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான குண்டம் திருவிழா மாசாணி அம்மன் கோயில் முன்பு உள்ள ராஜகோபுரத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கடந்த பத்து நாட்களாக அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான கடந்த மூன்றாம் தேதி மயான பூஜையும், நேற்று இரவு அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கோவிலின் அருகே உள்ள மைதானத்தில் நேற்று இரவு குண்டம் வளர்க்கப்பட்டது.



இதையடுத்து, இன்று 47 அடி நீளம் உள்ள தீக்குண்டத்தில் முன்னதாக கோயிலின் அருளாளி பூப்பந்து உருட்டி முதலில் தீ மிதித்து குண்டம் இறங்கினார்.



அதனைத் விரதம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.



பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த குண்டம் திருவிழாவை காண உள்ளூர் மட்டுமின்றி கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஆனைமலையில் குவிந்திருந்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...