திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுவதாக வெளியான தகவல் தவறானது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மறுப்பு

திமுக இளைஞர் அணியின் மாநில, மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் கோவை பாப்பம்பட்டி பிரிவில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை வரவேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த தீர்ப்பினை 27.09.2014 அன்றே வெளியிட்ட பெங்களுர் நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹாவிற்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் ஜல்லிகட்டிற்காக போராடிய இளைஞர்கள், மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கும், விவசாயிகள் மரணத்தில் ஆளும்கட்சியின் அலட்சியப்போக்கிற்கும், பவானி, பாம்பாறு ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டப்படுவதை தடுக்காத மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனத்தை தெரிவித்தும், நீட் தேர்விற்கு விலக்களிக்க உடனடியாக குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற வலியுறுத்தல், உதய் மின் திட்டத்தால் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் ரத்தாக கூடாது என்பன உள்ளிட்ட 11 தீர்மானங்களும் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலினிடம், அதிமுக துணை பொதுச் செயலாளராக தினகரன் தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது மற்ற கட்சிகளில் விவகாரங்களில் தலையிடுவது கிடையாது என தெரிவித்த அவர், திமுக சட்ட மன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று மாலை நடைபெறுவதாக வெளியான தகவலையும் மறுத்தார்.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...