தென்னிந்தியாவில் முதல் முறையாக கோவையில் வைரம், தங்க நகைகள் தயாரிப்பு பயிற்சி மையம் - டைமண்ட்ஸ் இந்தியா அழைப்பு

கோவையில் வைரம் மற்றும் தங்க நகைகள் தயாரிப்பதற்கான பயிற்சி மையம், வரும் 5 ம் தேதி டைமண்ட்ஸ் இந்தியா நிறுவனம் தொடக்கம். மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் கட்டணமில்லா பயிற்சியோடு மற்றும் ஊக்கத்தொகை பெறலாம் எனவும் அறிவிப்பு.


கோவை: இந்தியாவில் வைரம் மற்றும் தங்க நகை தயாரிப்புக்கான ஊழியர்களுக்கான தேவை அதிக அளவில் இருந்துவருகிறது. இவற்றை பூர்த்தி செய்யும் வகையில் கோவையில் முதல் முறையாக பெண்களுக்காகவே பெண்களால் நடத்தப்படும் பயிற்சி மையம் ஆர்.எஸ்.புரம் டிபிரோட்டில் வரும் 5ம் தேதி தொடங்கப்படவுள்ளது.

டைமண்ட்ஸ் இந்தியா என்னும் இந்த பயிற்சி நிறுவனம், வைரம் மற்றும் வைர நகைகள் மற்றும் தங்க வெள்ளி நகைகளை தயாரிக்கும் தொழில் நுட்பங்களை சொல்லிக் கொடுக்கும் பயிற்சி அளிக்கும் மையமாக சுமார் 5000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை, சென்னை டைமன்ட் மற்றும் நகைகள் வியாபாரிகளின் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி நாளை மறுநாள் தொடக்கி வைக்கவுள்ளார்.

பயிற்சி நிலையத்தின் சிறப்பு அம்சங்கள்

வைரம் மற்றும் வைரத் தொழிலில் ஆசிரியராக மற்றும் பயிற்சியாளராக, ஆலோசகராக 35 வருட அனுபவம் கொண்ட முரளிதரன் தலைமையில் இந்த பயிற்சி நிலையம் தொடங்க உள்ளது. முரளிதரனின் மாணவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்திலும், தமிழ்நாடு முழுவதிலும் வைர நகைகள் குறித்த தொழில் பாடங்களை கற்று சிறப்பாக வைர நகை வியாபாரம் மற்றும் வைர நகைகள் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில், இந்த ஆசிரியர் பணியை விரிவுபடுத்தி இன்று வைர நகை தொழிலை செய்து கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கும், வருங்காலத்தில் தொழில் முனைவோருக்கும் , இந்த நிறுவனங்களில் பணியாற்ற தேவையான எல்லா விதமான தொழில்முறை பயிற்சிகளை இந்தியாவிலேயே முதல்முறையாக பயிற்சிக்கு பிறகு நகை தொழில் தொடங்க ஆலோசனை கொடுத்து, அவர்களுடைய தொழிலில் உதவி புரிய தொழிலாளர்களையும், தொழிலாளர்களை நிர்வாகிக்க மேலாளர்களையும் உருவாக்கிக் கொடுக்கும் 360°டிகிரி முழுமையான கோணத்தில் இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.

லண்டன் அமெரிக்கா கலிபோர்னியா நாட்டில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள்

அகிலாண்டேஸ்வரி முரளிதரன் மற்றும் சேஷகோபால் முரளிதரன் ஆகியோர் இந்த ஆசிரியர் பணியை மேற்கொள்ளவுள்ளனர். இவர்கள் இருவரும் வைரம் மற்றும் வைர நகை தயாரிப்பு தொழில் தொடர்பாக லண்டன் மற்றும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் படித்து பட்டம் பெற்றவர்கள்.

இந்த பயிற்சி நிலையத்தில் வைர நகைகள் மற்றும் தங்க, வெள்ளி நகைகள் தயாரிப்பு தொழிலில் ஈடுபட விருப்பம் உள்ள தொழில் முனைவோருக்கு சிறந்த வகையில் தொழில் தொடங்க தேவையான எல்லாவிதமான பயிற்சிகளையும் ஒரு ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் இந்த டைமண்ட்ஸ் இந்தியா என்ற பயிற்சி நிறுவனத்தில் வகுப்புகள் தொடங்கவுள்ளது.

மேலும், இந்த பயிற்சி எடுத்துக்கொண்ட தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்க தேவையான ஆலோசனைகளும், வழிமுறைகளும் வழங்கப்படவுள்ளதோடு, நிறுவனத்திற்குத் தேவையான தொழிலாளர்கள், மேலாளர்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.

ஆண்டுக்கு 100 பேருக்கு கட்டணமில்லா பயிற்சி

இந்த பயிற்சி நிலையத்தில் ஆண்டு தோறும் 100 தகுதியான மகளிர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டு, கட்டணம் இல்லாத இலவசப் பயிற்சி அளிக்கப்படும், இந்த பயிற்சி காலம் 30 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை இருக்கும்.

இந்த பயிற்சியை முழுமையாக பூர்த்தி செய்தவர்கள் நம்முடைய கோவை மாவட்டத்திலும் அல்லது அவர்கள் இருக்கும் ஊருக்கு அருகாமையில் தகுந்த இடத்தில் பணியில் அமர்வதற்கான முழு உதவிகளும் செய்யப்படும்.

மேலும், இந்த கட்டணமில்லா இலவசப் பயிற்சியில் பங்கேற்க, விருப்பமுள்ள மகளிர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் டைமண்ட்ஸ் இந்தியா நிறுவனத்தில் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...