உடுமலையில் பேருந்து படிக்கட்டில் தொங்கும் மாணவர்கள் - காவல்துறை கவனிக்குமா?

உடுமலையிலிருந்து பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் பேருந்து படிகளிலேயே பயணம் செய்வதால் போலீசார் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை.


திருப்பூர்: உடுமலையில் காலை, மாலை நேரங்களில் பேருந்துகளில் பயணிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் படிகளிலேயே பயணம் செய்து வருவதால் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பழனி, பொள்ளாச்சி உள்ளிட்ட பல வெளியூர்களுக்குச் சென்று படிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பேருந்துகள் மூலமே பயணம் செய்கின்றனர்.



இதனால் தினசரி காலை வேளையில் உடுமலை பேருந்து நிலையத்தில் மாணவர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும்.

இங்கிருந்து பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் பெரும்பாலான மாணவர்கள் அரசு பேருந்துகள், காலியாக செல்லும் நேரங்களிலும் தனியார் பேருந்துகளில் படிக்கட்டு வரை தொங்கிக் கொண்டு செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

இம்மாணவர்களை போலீசார் பலமுறை கண்டித்தும் அவர்கள் அதனை அலட்சியம் செய்கின்றனர். மாணவர்கள் என்பதால் போலீசார் ஒரு எல்லைக்கு மேல் நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டுகின்றனர்.

படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணிக்கும் மாணவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் மீதும், அளவுக்கு அதிகமாகப் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்து நிர்வாகம் மீதும் போலீசாரும், போக்குவரத்து பிரிவு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...