கோவை துடியலூரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபர் கைது - போலீசார் அதிரடி..!

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த அப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வீட்டின் பூட்டை உடைத்து, நகைகள் மற்றும் பொருட்கள் திருடப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் துடியலூர் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் தலைமையில் உதவி ஆய்வாளர் அரவிந்தராஜன் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை போலீசார், தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வரும் மர்ம நபரை தீவிரமாக தேடி வந்தனர்.

இதில் அப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த முன்னாள் குற்றவாளியான கார்த்திகேயன் என்பவரை தனிப்படை போலீசார் சந்தேகத்தின் பேரில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

பழைய குற்றவாளியான கார்த்திகேயன் மீது ஏற்கனவே துடியலூர், வடவள்ளி, போத்தனூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...