கோவையில் குடும்பமாக சேர்ந்து கொள்ளையடித்த ஐவர் கைது - 40 சவரன் நகைகள் பறிமுதல்!

கோவையில் பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்து 40 பவுன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.



கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் பொதுமக்கள் அதிக அளவு கூடும் இடங்களான ரயில் நிலையம், பேருந்து நிலையம் திருவிழாக்கள் மற்றும் பேருந்துகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிப்பதற்காக கோவை வடக்கு மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஷ் மேற்பார்வையில், ஆர்.எஸ்.புரம் காவல் சரக கோவை மாநகர காவல் உதவி ஆணையாளர் ரவிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.



அதன் அடிப்படையில், கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருமலையாம்பாளையம் பகுதியை சேர்ந்த திவாகர்(வயது26), கண்ணையா (வயது30), பார்வதி(வயது67) முத்தம்மா(வயது23), கீதா(வயது24) ஆகிய ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 



இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாவர். இவர்கள் ஐவர் மீதும் கோவை மாநகரில் பல்வேறு காவல் நிலையங்களில் மொத்தம் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.



மேலும் இவர்களிடமிருந்து 40 பவுன் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



இந்த புலன்விசாரணையில் சிறப்பாக செயல்பட்ட கோவை ஆர் எஸ் புரம் காவல் சரகர் மாநகர காவல் உதவி ஆணையர் ரவிக்குமார், பி1 பஜார் காவல் நிலைய புலனாய்வு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் சின்னதுரை, பி2 ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபு, பி1 பஜார் புலனாய்வு பிரிவு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மாரிமுத்து, உமா மற்றும் தலைமை காவலர்கள் கார்த்திக் பூபதி ஆகியோரை கோவை மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஷ் பாராட்டினார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன், தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ள 5 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் பொதுமக்களின் உடைமைகளை திருடுவார்கள். பொதுமக்கள் பேருந்துகளில் பயணிக்கும் பொழுதும் பொது இடங்களில் இருக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதேபோல், ரேஸ்கோர்ஸ் மற்றும் சாய்பாபா காலனி காவல் நிலையங்களில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்படவுள்ளதாகவும், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துஐற ஆணையர் சந்தீஷ் எச்சரித்தார். இந்த தனிப்படையை போலீசாரும் பொதுமக்களுடன் பொதுமக்களாக இருந்து இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிப்பார்கள் என தெரிவித்தார்.

சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழாவில் இரண்டு மூன்று குழுக்கள் அமைத்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், இந்த விழாவை முன்னிட்டு ஏற்கனவே 40 கேமராக்கள் இருக்கும் நிலையில் கூடுதலாக 36 கேமராக்கள் பொறுத்தி கண்காணிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். செயின் பறிப்பு சம்பவத்தை தடுக்கும் பொருட்டு தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி பேருந்துகளில் நடைபெறும் திருட்டு சம்பவங்களை கண்டறியும் பொருட்டு மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து, சென்னை மேலிடத்தில் கூறி பேருந்துகளில் கேமராக்கள் பொருத்த பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அவ்வாறு செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் மாநகராட்சி காவல் துணை ஆணையர் சந்தீஷ் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...

கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக்...

ஜெர்மனியில் 2027ல் நடக்கும் உலோகத் தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு

ஜெர்மனியில் 2027 ஜூன் 21 முதல் 25 வரை The Bright World Of Metals சர்வதேச கண்காட்சி நடக்கிறது. கோவை கொடிசியாவில் நடந்த செ...

Ganja Chocolate Offender Detained Under Goondas Act in Coimbatore

Mossam Kumar, 30, who was arrested for allegedly possessing 5.250 kg of ganja and ganja chocolates for sale in the Maduk...

கோவையில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் 5.250 கிலோ கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த மோசம் குமார் என்பவர் கைது செ...