திருப்பூர் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா - பக்தர்கள் பக்தியுடன் தரிசனம்!

திருப்பூர் கூலிப்பாளையம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.



திருப்பூர்: திருப்பூர் கூலிப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

திருப்பூர் மாநகராட்சி 5வது வார்டுக்குட்பட்ட கூலிப்பாளையத்தில் 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாகாளி அம்மன் கோவில் உள்ளது. கோவிலின் திருப்பணிகள் நடைபெற்று நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிகள் மகா கணபதி ஹோமத்துடன் கடந்த 24ஆம் தேதி தொடங்கியது.

இதை அடுத்து விநாயகர் வழிபாடு, குபேர லட்சுமி நவகிரக ஹோமம், எந்திர பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா இன்று வேத பாராயணத்துடன் தொடங்கியது.



இதனை தொடர்ந்து மாகாளியம்மன் மற்றும் விநாயகர் கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.



இதில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



இதனைத் தொடர்ந்து கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...