நீலகிரி கூடலூரில் தேயிலைத் தோட்டத்திற்கு புகுந்த காட்டுயானைக் கூட்டம் - தொழிலாளர்கள் பீதி

நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவர்சோலை பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களுக்குள் திடீரென காட்டு யானைக் கூட்டம் புகுந்ததால் தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். யானைக் கூட்டத்தை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் நாளுக்கு நாள் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக, ஒற்றை ஆண் காட்டு யானைகளும், மக்னா யானைகளும் தேயிலை தோட்டங்களில் அவ்வப்போது புகுந்து தொழிலாளர்களை தாக்கி, அச்சுறுத்தி வருகின்றன.



இந்த நிலையில், இன்று காலை தேவர் சோலை பகுதியில் உள்ள 3 டிவிஷன் தேயிலை தோட்டத்திற்குள் காட்டு யானை கூட்டம் ஒன்று புகுந்தது. அதனை கண்டு அச்சம் அடைந்த தொழிலாளர்கள், இன்று பணிக்கு செல்லவில்லை.



இந்த நிலையில் தேயிலைத் தோட்டத்திற்குள் சுற்றித்திரியும் யானை கூட்டத்தை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



இருப்பினும், அந்த யானை கூட்டம் வனபகுதிக்குள் செல்லாமல் தொடர்ந்து எஸ்டேட் பகுதியிலேயே சுற்றி வருவதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...