கோவையில் ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - போக்குவரத்து பாதிப்பு

கோவையில் மத்திய அரசின் தொழிலாளர் கொள்கையை எதிர்த்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.



கோவை: மத்திய அரசின் தொழிலாளர் கொள்கையை எதிர்த்தும், பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஏஐடியுசி சங்கத்தினர் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக, கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக ஏஐடியுசி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசின் தொழிலாளர் கொள்கையை எதிர்த்து முழக்கங்களை எழுப்பினர். 240 நாட்கள் பணிபுரிந்தாலும் பணி நிரந்தரம், என்டிசி ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும், நலவாரிய பதிவுகளை எளிமைப்படுத்தி நிதி உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டுமெனவும் அவர்கள் அப்போது வலியுறுத்தினர்.



ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்தப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



இதையடுத்து, அங்கிருந்த காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து, பேருந்துகளில் அழைத்துச் சென்றனர்.

Newsletter

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....