குடியரசு தினக் கொண்டாட்டம் - கோவை போலீசார் ஒத்திகை அணிவகுப்பு!

கோவையில் குடியரசு தினத்தை முன்னிட்டு காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் காவலர்களின் ஒத்திகை அணிவகுப்பு நடைபெற்றது.


கோவை: குடியரசு தின விழா நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், நாடு முழுவதும் அரசு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. அதில், குறிப்பாக, இராணுவம் மற்றும் காவல்துறையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் அனைத்து மாவட்டங்களிலும் இடம்பெறும்.



இந்நிலையில், குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, கோவை மாவட்டத்தில் குடியரசு தின விழா வஉசி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. அதனையொட்டி, கோவை மாநகர் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.



இதற்கான ஒத்திகை, காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.



இதில், சுமார் 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பங்கேற்றனர். இங்கு, அணிவகுப்பு தொடங்கப்படுவதில் இருந்து தேசிய கொடிக்கு மாவட்ட ஆட்சியருக்கும் மரியாதை செலுத்துவது, மாவட்ட ஆட்சியர் அணி வகுப்பு மரியாதை ஏற்றுக் கொள்ளும்போது பின்பற்ற வேண்டியவை உட்பட அனைத்து நிகழ்வுகளுக்கும் ஒத்திகை பார்க்கப்பட்டது.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...