கேரளாவில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை

பாலக்காடு மாவட்டத்தில் ஒருவரை தாக்கி கொன்று விட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை காட்டு யானையை வனத்துறை மருத்துவர்கள் அடங்கிய 75 பேர் கொண்ட குழுவினர் மயக்க ஊசி செலுத்தி பத்திரமாக பிடித்தனர்.


கோவை: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டி உள்ள தோணி என்ற மலை கிராமத்தில் கடந்த சில மாதங்களாக காட்டு யானை ஒன்று பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இப்பகுதியில் நடை பயிற்சிக்கு சென்ற சிவராமன் என்பவரை யானை தாக்கிக் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் விவசாய நிலங்களில் புகுந்த அந்த காட்டு யானை பயிர்களை சேதப்படுத்தி உள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இதனால் அந்த காட்டு யானையை பிடித்து அடர் வனப்பகுதிக்குள் அனுப்ப வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் வனத்துறை கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த காட்டு யானையை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் அந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறை கால்நடை மருத்துவர் அருண் சக்ரியா தலைமையில் 75 பேர் கொண்ட குழு ஈடுபடுத்தப்பட்டது.



காட்டு யானையை வெற்றிகரமாக மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர், கும்கி யானை உதவியுடன் காட்டு யானையை லாரியில் ஏற்றி அழைத்து சென்றனர். பிடிபட்ட யானையை அதே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கூண்டில் வைத்து கும்கி யானையாக மாற்ற பயிற்சி கொடுக்க உள்ளதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க பட்டதற்கு பிறகு அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Newsletter

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...