கிணத்துக்கடவு அருகே சாலை விபத்தில் காயம்: சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழப்பு

கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளத்தில் சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு.


கோவை: கிணத்துக்கடவு அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்த பெண் உயிரிழந்தார்.

கோவை சரவணம்பட்டி அம்மன் நகர் பகுதி சேர்ந்த சிகாமணி. இவரது மனைவி ராணியும், மகன் அரவிந்த்தும் கடந்த 14ஆம் தேதி வால்பாறை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளம் பகுதி வழியாக செல்லும் பொள்ளாச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, பின்னால் அதிவேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம், அரவிந்த் சென்ற வாகனம் மீது வேகமாக மோதியது.

இதில் அரவிந்த்துக்கும், பின்னால் அமர்ந்திருந்த ராணிக்கும், பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் பலத்த காயமடைந்த ராணியை மேல்சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குச் சிகிச்சை பெற்று வந்த ராணி நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...