15 நாட்களுக்குள் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தமிழகத்தில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை தீர்வு வழங்கியுள்ளது.

இதைத்தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற கோவை மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை 15 நாட்களுக்குள் வேருடன் முழுமையாக அப்புறப்படுத்த பட்டா உரிமையாளர்கள் முன்வரவேண்டும்.

சீமைக் கருவேல மரங்களால் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதுடன் காற்று வெளியில் உள்ள ஈரப்பதமும் உறிஞ்சப்படுகிறது. இதனால், மழை மேகங்கள் திரண்டு மழை பொழிவது தடுக்கப்படுகிறது.

பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு நம் நாட்டில் மழைவளம், நீர்வளம் காத்திட சீமை கருவேல மரங்களை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும்". இவ்வாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...