கோவையில் லாரி மீது பைக் மோதி விபத்து - இளைஞர் உயிரிழப்பு

கோவை நவக்கரை அருகே பால் ஏற்றிவந்த கண்டெய்னர் லாரி மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற 2 பேரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


கோவை: கோவை சிட்கோ பகுதியை சேர்ந்தவர் சூரிய பிரகாஷ் (வயது21). சிஎன்சி ஆப்ரேட்டராக வேலை செய்து வந்த இவர், தமது நண்பர் மதுக்கரை அன்னை இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் நித்திஷுடன் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு இரு சக்கர வாகனத்தில் பாலக்காடு சென்றனர்.

பின்னர், மீண்டும் இருசக்கர வாகனத்தில் கோவை நோக்கி திரும்பி வந்துகொண்டிருந்தனர். சூரிய பிரகாஷ் இருசக்கர வாகனத்தை ஓட்டியுள்ளார். கோவை மாவட்டம் நவக்கரை அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த அந்த இருசக்கர வாகனம் சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருந்த பால் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.



இதில், சூரியபிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் நித்திஷ், படுகாயங்களுடன் சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக க.க சாவடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM...

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...