திருப்பூரில் தமிழர் பேரவை சார்பில் சமத்துவ பொங்கல் விழா - சாதி, மதம் கடந்து சமத்துவ பொங்கல் வைத்த பெண்கள்

திருப்பூரில் தமிழர் பேரவையின் சார்பில் நடைபெற்ற 31 ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழாவில் 150க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ பெண்கள் சாதி மதத்தை கடந்து சமத்துவ பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர்.



திருப்பூர்: தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் தமிழர் பேரவை சார்பில் 31 ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.



இதில் சாதி மதத்தை கடந்து இஸ்லாமிய, கிறிஸ்தவ பெண்கள் ஒரே இடத்தில் 150 பொங்கல் பானைகளில் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர்.



இந்த விழாவில் தமிழர்களின் பாரம்பரியமான தப்பாட்டம் முழங்க ஆண்களும் பெண்களும் கலாச்சார புத்தாடைகள் அணிந்து பொங்கல் திருவிழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

மேலும் பொங்கல் பானையில் பொங்கல் பொங்கி வரும் பொழுது குலவை சப்தமிட்டு பொங்கலோ பொங்கல் என்று முழக்கமிட்டனர்.



இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்ரமணியம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...