திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தில் பயங்கர தீவிபத்து

திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகப் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பின்னலாடை பொருட்கள் எரிந்து நாசம்.


திருப்பூர்: திருப்பூர் கல்லூரி சாலையில் இயங்கி வந்த பின்னலாடை நிறுவனத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பின்னலாடை பொருட்கள் எரிந்து நாசமாகின. சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாகப் போராடித் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

திருப்பூர் கல்லூரி சாலையைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் பகுதியில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரிக்குப் பின்புறம் காருண்யா கார்மெண்ட்ஸ் என்ற பெயரில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வருகிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று இரவு முதல் பின்னலாடை நிறுவனத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

பின்னலாடை நிறுவனத்தின் மேல் தளத்தில் பின்னலாடையை பேக்கிங் அயனிங் செய்யும் தளம் உள்ளது. கீழ்த்தளத்தில் பின்னலாடைக்குத் தேவையான ரோல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் மேல் தளத்தில் ஏற்பட்ட மின்கசிவினால், பின்னலாடை பொருட்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கும், பின்னலாடை நிறுவனத்தின் உரிமையாளருக்கும் தகவல் கொடுத்தனர்.



சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கொழுந்து விட்டு எரிந்த தீயை 5 மணி நேரத்துக்கு மேலாகப் போராடி தீயை அணைத்தனர்.



பின்னலாடை நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பின்னலாடை பொருட்கள் எரிந்து நாசமாகின. பின்னலாடை நிறுவனத்தில் தீப்பிடித்த சம்பவம் குறித்து வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பின்னலாடை நிறுவனத்தில் ஏற்பட்ட தீயினால் அப்பகுதி முழுவதும் கரும்புகையாக காட்சியளித்தது.

Newsletter

10 kg Cannabis Seized near Karumbukadai; Mother, Son Among Three Arrested

Karumbukkadai Woman Inspector Muthulakshmi arrested three people, including a 47-year-old woman and her son, after polic...

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...