'அதிமுக சார்பில் பொங்கல் விழா கொண்டாடாதது வெட்கக்கேடு' - கோவையில் பிரேமலதா விஜயகாந்த் காட்டம்!

கோவை என்றாலே அன்பான மக்கள். வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்பதை கோவை நிரூபிக்கிறது. கேப்டனுடன் நான் இங்கு வராத தெருக்கள் இல்லை. சுத்தமான மாவட்டமாக கோவை உள்ளதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் புகழாரம்.



கோவை: கோவை வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில், கணபதி பகுதியில் 5 ஆயிரம் பேருக்கு பொங்கல் பொருட்கள் (கரும்பு, மண்ட வெல்லம், பச்சரிசி, முந்திரி பருப்பு) வழங்கும் விழா நடைபெற்றது. இதில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார்.

முன்னதாக விழாவில் பேசிய பிரமேலதா விஜயகாந்த், "கோவை என்றாலே அன்பான மக்கள். வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்பதை கோவை நிரூபிக்கிறது. கேப்டனுடன் நான் இங்கு வராத தெருக்கள் இல்லை. சுத்தமான மாவட்டமாக கோவை உள்ளது. சாதி மதம் இனம் மொழிக்கு அப்பாற்பட்டது தேமுதிக. நாங்கள் பொங்கலும் கொண்டாடுவோம். ரம்ஜானும் கொண்டாடுவோம் கிறிஸ்துமசும் கொண்டாடுவோம்.

உலகத்தில் வாழும் அனைத்து தமிழர்களாலும் போற்றக்கூடியது பொங்கல். நான் கிராமத்தில் இருந்து வந்துதான் தலைவர் மனைவியாக, உங்கள் அண்ணியாக நிற்கிறேன். நெசவாளர்களுக்கு என்றும் தேமுதிக துணை நிற்கும். பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றி, வறுமைக்கோட்டுக்கு கீழ் ஆக்கி உள்ளனர். ஆட்சியாளர்கள் ஓட்டுக்கு காசு கொடுக்கின்றனர்.

சின்ன கவுண்டர் படம், வானத்தைப்போல படம் போன்றவற்றில் கொங்கு மண்டலத்தை காட்டியது கேப்டன். 40 வருடம் மக்களுக்காக வாழ்ந்தவர் கேப்டன்.

மக்களை தங்கத்தட்டில் வைத்து தாலாட்டுவேன் என்றவர் கேப்டன். ரேஷன் பொருள் உங்கள் வீடு தேடி வரும் என்று சொன்னவர் கேப்டன். யாரும் மறந்து விடாதீர்கள்.

தேமுதிக நேர்மையான கட்சி நல்லவர் ஆரம்பித்த கட்சி. என்றும் தவறான வழியில் தேமுதிக செல்லாது காவல்துறையே. எங்காவது ஒரு இடத்தில் எங்கள் தொண்டர்கள் வசூல் செய்துள்ளார்களா?

எங்கள் தொண்டர்களின் வியர்வையில் சம்பாதித்த காசில்தான் நாங்கள் உதவி செய்கிறோம். விழாப் பொதுக்கூட்டம் என்றால் குறைந்தது 100 குடும்பம் ஆவது பயனாளி ஆக வேண்டும் என எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தவர் கேப்டன். அதிமுகவை வெட்கக்கேடாக நினைக்கிறேன். தமிழ்நாட்டில் எங்கும் பொங்கல் விழா அதிமுக சார்பில் கொண்டாடப்படவில்லை. மனதுக்கு கஷ்டமாக உள்ளது.

பெண்களுக்காக நான் களத்தில் இறங்குவேன். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலர்களுக்கு திமுக நிர்வாகிகள் வன்கொடுமை செய்துள்ளனர். சட்டமன்றத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்றீர்கள். பெண் காவலரை துன்புறுத்திய திமுக நிர்வாகியை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து ஓராண்டு காலம் சிறையில் போடுங்கள். பெண் காவலர்களுக்கு இந்த நிலை என்றால் மற்றவர்களுக்கு என்ன நிலை?.

கோவை கலெக்டர் வீட்டுக்குள்ளே மர்ம நபர்கள் நுழைகின்றனர். சந்தன மரம் வெட்டுகின்றனர். திமுக கோவை, தர்மபுரி, சேலத்தில் இல்லை. செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்தபோது என்ன பேசினார்கள் என்பது முகநூலில் வருகிறது. செந்தில்பாலாஜிதான் சிறந்தவர் என முதல்வர் தெரிவிக்கிறார். ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு நிலைப்பாடு.

சக்கரை பொங்கல் என்று சர்க்கரை போடுகிறீர்களா? உங்கள் மனைவியிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். சர்க்கரையை கொண்டு பொங்கல் நடத்தும் ஆட்சி திமுக ஆட்சி. வெல்லத்தை கொண்டு பொங்கல் செய்வதுதான் நமது கலாச்சாரம். விவசாயிகள் வயிறு எரிகின்றனர். கரும்பு விளைவிப்பவர்களுக்கு தான் கஷ்டம் தெரியும்.

கலெக்ஷன் கரப்ஷன் கமிஷன் நீங்கள் சொல்லிக் கொண்டிருந்தீர்கள். இப்போது உங்கள் ஆட்சியில் நடக்கிறது. 2500 ரூபாய் மக்களுக்கு பொங்கல் பரிசாக நீங்கள் கொடுத்து இருக்க வேண்டும். அனைத்து விலைவாசியும் உயர்வு. ஆயிரம் ரூபாய் கொடுத்து மக்களை ஏமாற்றி விட்டனர். காசு கொடுத்து திமுகவும், அதிமுகவும் மக்களை ஏங்க வைத்துவிட்டனர்.

டாஸ்மாக் வருமானத்தில்தான் ஆட்சி நடக்கிறது. மக்களை போதையிலேயே வைக்கின்றனர். தமிழ்நாடு முழுக்க கஞ்சா விற்பனை. இந்திய அளவில் கஞ்சா புழக்கத்தில் தமிழகம் முதல் இடம். ஜி ஸ்கொயர் கிட்ட உங்கள் வீரத்தை காட்டுங்கள். லஞ்சம் வாங்குபவர்களிடம் பணி செய்யுங்கள். நாங்கள் கொடி கட்டுவதால் லைட் போடுவதால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா.? காவல்துறை மக்களை காக்கும் துறையாக மாற வேண்டும். காவல்துறை எப்படி இருக்க வேண்டும் என்று அடையாளமாக வாழ்ந்து காட்டியவர் கேப்டன்.

தமிழக அரசியல் வரலாற்றில் ஆளுநர் முதன்முறையாக வெளிநடப்பு செய்தது தலைகுனிவு நாளாக கருப்பு தினமாக பதியப்பட்டிருக்கிறது. கவர்னர் சாதித்துக் காட்டிருக்க வேண்டும். தேசிய கீதம் பாடுவதற்கு முன் வெளியேற ஆளுநருக்கு தேமுதிக கண்டனம் தெரிவிக்கிறது." இவ்வாறு அவர் பேசினார். 

பின்னர், பொதுமக்களுக்கு பிரேமலதா விஜயகாந்த், தேமுதிகவின் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினார்.

Newsletter

Flights Temporarily Diverted to Kochi After Compound Wall Collapse Near Coimbatore Airport

Following heavy rain and strong winds in Coimbatore today evening, a section of the compound wall near Coimbatore Intern...

கனமழை எதிரொலி: கோவை விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் விமானங்கள் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது

கோவையில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றால் சின்னியம்பாளையம் அருகே கோவை சர்வதேச விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்...

“Jayalalithaa’s Soul Is Punishing the AIADMK,” Says TVK Minister Sengottaiyan in Coimbatore

TVK Minister Sengottaiyan  launched a sharp attack on the AIADMK, stating that the party’s ongoing internal turmoil was...

Simplicity News Impact: Coimbatore Airport Authorities Restore Drinking Water Facility

Passengers and members of the public appreciated the swift action taken by airport authorities to restore the malfunctio...

நொய்டா தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து கோவையி...

Prioritise Safety Measures: Salem ADRM Urges During Inspection at Tiruppur Railway Station

Salem Additional Divisional Railway Manager (ADRM) R. Saravanan inspected the ongoing Amrit Bharat Scheme works and main...