வால்பாறை அருகே தொழிலாளர்கள் குடியிருப்பில் தீ விபத்து - 6 வீடுகள் எரிந்து நாசம்!

வால்பாறை அருகே உருளிக்கல் எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு வீடுகள் எரிந்து, பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம். தொழிலாளர்கள் அனைவரும் வேலைக்குச் சென்றதால், உயிர்ச் சேதம் தவிர்ப்பு.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 62 எஸ்டேடுகள் உள்ளன. இங்கு தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு எஸ்டேட் நிர்வாகம் சார்பில் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தங்கி தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் உருளிக்கல் எஸ்டேட் முதல் பிரிவு பகுதியில் உள்ள தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதியில் இன்று காலை 8 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.



அப்போது வேலம்மாள் என்பவர் வீட்டிலிருந்து புகை வருவதைப் பார்த்த சிலர், உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர்



தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் வருவதற்குள், தீ வேகமாகப் பரவியதால், தொழிலாளர்கள் டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைத்தனர்.



பின்னர் வந்த தீயணைப்புத் துறையினர் மற்ற வீடுகளுக்கு தீ பரவாமல் தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் ஆறு வீடுகள் எரிந்து சேதமாகியது.



இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமானது.



தொழிலாளர்கள் அனைவரும் வேலைக்குச் சென்றதால், உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.



தகவலறிந்து வந்த வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...