சித்த மருத்துவ தினம் - கோவையில் சித்தா விழிப்புணர்வு மூலிகை கண்காட்சி!

சித்த மருத்துவத்தின் தந்தையான அகத்தியர் பிறந்தநாளான இன்று சித்த மருத்துவ தினத்தையொட்டி கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சித்தா குறித்து விழிப்புணர்வு மூலிகை கண்காட்சி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.


கோவை: சித்த மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் அகத்தியரின் பிறந்த தினமான இன்று சித்த மருத்துவ தினமாக கொண்டாடப்படுகிறது. சித்தர்களில் முதன்மையாக போற்றப்படும் 18 சித்தர்களில் முதல் சித்தராக கருதப்படுபவர் அகத்தியர்.



தமிழ் மருத்துவத்தை முதல்நிலைப்படுத்தி பல சிகிச்சை முறைகளை ஏற்படுத்தி சித்த மருத்துவத்தை தோற்றுவித்தார். உடல் கூறுகள், உடல் செயலியல், அறுவை சிகிச்சை, மன நோய்கள், மந்திரம், தந்திரம், வைத்தியம், யோகம், நோய் கணிப்பு, தத்துவம் என அனைத்திலும் நிபுணத்துவம் பெற்றவர் அகத்தியர்.

அகத்தியரைப் பற்றிய குறிப்புகளும் கல்வெட்டுகளும் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் காணப்படுகின்றன. கம்போடியா, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா, இந்தோனேஷியா, வியட்நாம் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் காணப்படுகின்றன.



தமிழ் மரபின் மருத்துவ மகிமையை உலகம் அறிய செய்த அகத்தியர் பிறந்த நாளான இன்று தேசிய சித்த மருத்துவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் சித்தா தினத்தை முன்னிட்டு சித்த மருத்துவ நிறுவனங்கள், மருத்துவமனைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுடன் இணைந்து மூலிகை கண்காட்சிகள், மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு பேரணிகள், கருத்தரங்கங்கள், சொற்பொழிவுகள் பயிற்சி பட்டறைகள் நடைபெற்று வருகின்றன.



அதன் ஒரு பகுதியாக கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சித்தா துறை சார்பில், சித்த மருத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதில், சித்த மருத்துவத்துக்கான கடுக்காய், ஜாதிக்காய், சுக்கு , மிளகு, திப்பிலி, முடக்கத்தான் , வல்லாரை, பொன்னாங்கண்ணி உள்ளிட்ட மூலிகை மற்றும் பச்சை தாவரங்களை காட்சிப்படுத்தப்பட்டன.

உலகில் சுகாதார துறைக்கு நெருக்கடி மற்றும் பேரிடர் ஏற்படுகின்ற காலங்களில் பெரும் சவால்களை சித்த மருந்துகள் சமாளித்து உயிரை காத்திருக்கின்றன.

அதற்கு சான்றாக சமீபத்தில் அமைந்திருப்பது கபசுர குடிநீர். கொரோனா பேரிடரில் தடுப்பூசி கிடைக்காத நிலையில் உடலில் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தவும், கோவிட் சிகிச்சை பெற்றவர்களுக்கு உடல் நலம் பெறவும் பெரிதும் உதவியது சித்த மருந்தான கபசுர குடிநீர்.

இந்த நிலையில் சித்த மருத்துவம் உடல் நலத்துக்கு பக்க விளைவை ஏற்படுத்தாது என்பதனாலும், மகத்தான மருந்தாக உட்கொண்டு பொதுமக்கள் பயனடைகின்றனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...