கோவையில் இடம் வாங்கி வீட்டுமனை கட்டி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த தம்பதிகள் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்…!

மீனா எஸ்டேட் பகுதியில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்த தம்பதிகள், இடம் வாங்கி வீடு கட்டித் தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த வழக்கில் சிறையில் உள்ள நிலையில், அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.



கோவை: கோவை ராமநாதபுரம் மீனா எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாத் சிங் (41), இவரது மனைவி கலைவாணி (38). இருவரும், கியூப் ஸ்கோயர் கன்ஸ்ட்ரெக்சன் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்துள்ளனர்.

இடம் வாங்கி வீடி கட்டி தருவதாக கூறி கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த தனியார் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலரிடம், பல லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்தனர். இது குறித்து புகாரின் பேரில், ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ஜெகநாத்சிங் மற்றும் கலைவாணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், ஜெகநாத் சிங்கை போலீசார் காவலில் எடுத்து விசாரித்த போது அவர்கள் மேலும பலரை ஏமாற்றியதும், முன் பணமாக ரூ.20 லட்சம் பெற்று ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அதனை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

இதனிடையே, ஜெகநாத்சிங் மற்றும் கலைவாணி ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டதன் பேரில், இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

ஏற்கனவே, சிறையில் உள்ள இருவருக்கும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஆணை நகலை காவலர்கள் வழங்கினர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...