‘வானில் பறந்த வண்ணத் தும்பிகள்’ - ஆதரவற்ற பள்ளி மாணவ, மாணவிகளின் கனவை நனவாக்கிய தனியார் தொண்டு நிறுவனம்..!

விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஆதரவற்ற பள்ளி மாணவ, மாணவிகளை சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் அழைத்துச் சென்று அவர்களின் கனவை நனவாக்கிய ரெயின் டிராப்ஸ் அமைப்புக்கு குவியும் பாராட்டு.


கோவை: ரெயின் டிராப்ஸ் (Rain Drops) என்ற அமைப்பு பல்வேறு கலை சார்ந்த நிகழ்ச்சிகள் வாயிலாக சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்த அமைப்பானது, சமீபத்தில், சென்னையில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் ஆய்வு ஒன்றை நடத்தினர்.

அப்போது, அங்கு வசிக்கும் பல குழந்தைகளுக்கு தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது விமானத்தில் பறக்க வேண்டும் என்பது பெரும் ஆவலாக இருந்தது தெரியவந்தது. விமானத்தில் பயணிக்க ஆசைப்பட்ட குழந்தைகளின் கனவை நனவாக்க முயற்சிகளை அந்த அமைப்பினர் மேற்கொண்டு வந்தனர்.

இதனையொட்டி சத்யபாமா பல்கலைக்கழகத்துடன் இணைந்து “வானமே எல்லை” என்ற திட்டத்தின் மூலமாக மாணவ மாணவிகளுக்காக ஒரு நாள் விமான பயணத்தை ஏற்பாடு செய்தனர்.

இதற்காக சேவாலயா மற்றும் ஆனந்தம் உள்ளிட்ட இல்லங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 26 குழந்தைகள், இன்று காலை சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டு மீண்டும் கோவையில் இருந்து சென்னைக்கு ரயிலில் அழைத்து செல்லப்பட்டனர்.



இதில், ஒரு பார்வை மாற்றுத்திறனாளி மாணவரும் ஒரு திருநங்கை மாணவியும் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.



சென்னையில் இருந்து விமானத்தில் கோவை வந்திறங்கிய மாணவ மாணவியரை கோவை விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப், வருவாய் பிரிவு அதிகாரி பூமா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

விமானம் மூலம் கோவை வந்த மாணவ மாணவியர், கோவை அறிவியல் மையம், ஜி.டி.நாயுடு அருங்காட்சியகம் என கோவையின் முக்கிய இடங்களை சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர்.



இந்த விமான பயணத்தை சிறார்கள் வாழ்நாள் முழுவதும் நினைவு கூறத்தக்க வகையில் இயற்கை அறிவியல் ஆய்வாளரும், மாநில திட்டக்குழு உறுப்பினருமான சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், பிரபல பாடகர்களும் சின்னத்திரை நட்சத்திரங்களுமான சிவாங்கி, சாம் விஷால், rain drops அமைப்பின் நிறுவன தலைவர் அரவிந்த் ஜெயபால் மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் குழந்தைகளுடன் பயணித்து மகிழ்ந்தனர்.

இந்த ஏற்பாட்டை செய்த ரெயின் டிராப் (rain drops) அமைப்பின் நல்லெண்ண தூதராக ஆஸ்கார் வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியும் இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரெஹானா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

SNR சன்ஸ் அறக்கட்டளை CEO C.V. ராம்குமாருக்கு மதிப்பு மிக்க தொழில் சேவை விருது

Rotary Club of Coimbatore Millennium மற்றும் Ramakrishna Matric Higher Secondary School Interact Club இணைந்து SNR சன்ஸ்...

கோவை-குவைத் இடையே நேரடி விமான சேவை ஏப்ரல் இறுதியில் தொடக்கம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு Jazeera ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ஏப்ரல் இறுதியில் நேரடி விமா...

கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சூர்யா பிரகாஷ் அறிவிப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் க...

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பெங்களூருவில் மாபெரும் சந்திப்பு

பெங்களூரு மடிவாலாவில் SRIT Alumni Connect 2K26 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகள் மற்றும் ஆண்டுகளைச் சேர்ந்த 1...

சென்னை-கோவை விமானக் கட்டணம் ரூ.16,500 ஆக உயர்வு: தொடர் விடுமுறை காரணம்

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சென்னை-கோவை விமான கட்டணம் ரூ.4,966-இலிருந்து ரூ.16,496 ஆக பல...

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளி ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் ஊர்வலம் நடைபெற்றது. இயேசு சிலுவையைச் சுமந்து செல்லும்...