கோவை கிணத்துக்கடவு மக்கள் தொடர்பு முகாமில் ரூ.4.53 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

கிணத்துக்கடவில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு முகாமில் ரூ.4.53 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 486 பயனாளிகளுக்கு வழங்கிய மாவட்ட ஆட்சியர் சமீரன் மக்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.



கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள சொக்கனூரில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவரின் மக்கள் தொடர்பு முகாம் இன்று நடைபெற்றது.



கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் கால்நடை துறை,சமூக நலத்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார்.



இதைத்தொடர்ந்து நடைபெற்ற முகாமில் 486 பயனாளிகளுக்கு 4 கோடியை 53 லட்சத்து 64 ஆயிரத்து 985 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.



பின்னர் கல் குவாரிகளால் ஏற்படும் பிரச்சனைகள், இலவச வீட்டு மனை பட்டா போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் வழங்கினர்.



இந்த முகாமில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, மாவட்ட ஊராட்சிகளின் துணை இயக்குனர் கமலக்கண்ணன், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், சிக்கந்தர் பாட்ஷா, சொக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு என்ற திருநாவுக்கரசு, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...