மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

திருப்பூரை சேர்ந்த ஆறுமுகம் கடந்த 6-ம் தேதி அவரது மனைவியுடன் பல்லடம் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் ஆறுமுகம் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ஹெல்மட் அணிந்திருக்கவில்லை. அவரை உடனடியாக சூலூர் கே.எம்.சி.எச் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கே.எம்.சி.எச் அவிநாசி சாலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்த வித  முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் கடந்த 8-ஆம் தேதி அவருக்கு மூளைச்சாவு எற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது மகன் சரவணன் மற்றும் மகள் சங்கீதா அவர்களும் தந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தார். அவரது கண்கள், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் ஆகியவை தானமாக பெறப்பட்டடு, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கும், கண்கள் அரவிந்த் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.

இது குறித்து கே.எம்.சி.எச் மருத்துவமனை தலைவர் நல்ல G. பழனிசாமி  கூறுகையில், மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். பின்னர்  உடல் உறுப்பு தானம் வழங்கிய ஆறுமுகம் குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறினார்.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...