கோவை சரவணம்பட்டியில் மெகா சூதாட்டம் மற்றும் மது பாட்டில்கள் பதுக்கல் - ரூ.4.86 லட்சம் பறிமுதல், 32 பேர் கைது..!

இரு வேறு சம்பவங்களில், சரவணம்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட இடங்களில் ரூ.4.86 லட்சத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 31 பேரை கைது செய்தனர், அதே போல, 138 மதுபாட்டில்களை டாஸ்மாக்கில் பதுக்கி வைத்திருந்த நபரை கைது செய்தனர்.



கோவை: கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மெகா சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்த போது, ஒரு வீட்டில் ஒரு கும்பல் பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவர்களை போலீசார் பிடிக்க முயற்சி செய்த போது, போலீசார் வருவதை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் ரூ.4.86 லட்சத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 31 பேரை கைது செய்து, அவர்கள் சூதாட்டத்திற்கு வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று சரவணம்பட்டி சப் இன்ஸ்பெக்டர் பழனிசாமிக்கு கணபதி பகுதியில் திருட்டுத்தனமாக மதுபாட்டில் பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த ஒரு டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் மது விற்பனையில் ஈடுபட்ட நெல்லையை சேர்ந்த கணேசன் (30) என்பவரை பிடித்தனர். மேலும், அவர் விற்பனைக்காக வைத்திருந்த 138 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...

LPF and Affiliated Unions Protest in Coimbatore Against Centre and State Governments’ Labour Policies

The Coimbatore District Labour Progressive Federation (LPF) Council and affiliated unions staged a protest near the Red...