திருப்பூர் அவிநாசி அருகே மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் தர்காவில் கார்த்திகை தீப வழிபாடு

அவிநாசி அடுத்த கானூரில் உள்ள தக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் முஹம்மத் ஷா வலி தர்காவில், மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் கார்த்திகை தீபத்தையொட்டி தர்கா முழுவதும் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபாடு.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த கானூர் ஊராட்சியில் அமைந்துள்ள தக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் முஹம்மத் ஷா வலி தர்கா தமிழகத்தில் மிகவும் சிறப்பு பெற்றதாகும்.



தமிழ்நாடு வக்பு வாரியத்தில் இணைக்கப்பட்ட இந்த தர்காவில் இப்பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் சென்று வழிபடுவது வழக்கம்.



இந்நிலையில், கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் அப்பகுதி மக்கள் தர்காவில் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு பெண்கள் தர்காவில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

மேலும், தர்காவை சுற்றிலும் பெண்கள் கார்த்திகை விளக்குகளை ஏற்றினர். தர்காவில் தொழில் விருத்தி, திருமணம், குழந்தை பாக்கியம் என எந்த ஒரு வேண்டுதல் வைத்தாலும் நிறைவேறுவதால் இந்த தர்காவிற்கு ஜாதி, மதம், இனம் பாராமல் அனைத்து தரப்பு மக்களும் வருகிறார்கள்.

கார்த்திகை தீபத்தின் போது இப்பகுதியில் உள்ள மக்கள் இங்கு வந்து கார்த்திகை தீபம் ஏற்றுவது ஆண்டுதோறும் வழக்கமாக கொண்டுள்ளனர். மத நல்லிணக்கத்திற்கு சிறந்த உதாரணமாக இந்த தர்கா விளங்குகிறது. தொன்று தொட்டு இங்கு கார்த்திகை தீபம் ஏற்றுவது வழக்கமாக உள்ளது.

மேலும் இங்கு ஆண்டு தோரும் சந்தனக்கூடு உருஷ் விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சந்தனக்கூடு உருஷ் விழாவில் கோவை, திருப்பூர், ஈரோடு, சத்தி, மேட்டுப்பாளையம், சென்னை, மைசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...