கூடலூரில் PM2 மக்னா யானை தாக்கி மேலும் ஒரு மூதாட்டி உயிரிழப்பு - மக்கள் அச்சம்..!

PM2 மக்னா யானையை வனத்துறையினர் கண்காணித்து வரும் நிலையில், புளியம்பாறை பகுதியை சேர்ந்த கல்யாணி என்ற மூதாட்டியின் உடல் யானை தாக்கி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவாலா மற்றும் புளியம்பாறை பகுதியில் PM2 என்ற மக்னா யானை கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்து வருகிறது.

இந்த யானை இதுவரை 45க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து சேதப்படுத்தியதுடன் கடந்த 19ஆம் தேதி பாப்பாத்தி என்ற மூதாட்டியையும் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து இந்த யானையை பிடித்து முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் விட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 12 நாட்களாக அந்த யானையைப் பிடிக்கும் பணியில் கூடலூர் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் அந்த யானை தொடர்ந்து போக்கு காட்டி வருவதனால் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் 13-வது நாளாக இன்றும் ட்ரோன் கேமரா மூலம் யானையை கண்காணிக்கும் பணி நடைபெற்றது.

இதன் காரணமாக புளியம்பாறை அருகே உள்ள கற்குபாளி என்ற இடத்தில் PM2 மக்னா யானை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து கண்காணித்து வரும் வனத்துறையினர் பின் தொடர்ந்து சென்ற போது, மூதாட்டி ஒருவரின் உடல் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் சடலமாக கிடந்த மூதாட்டி புளியம்பாறை பகுதியை சேர்ந்த கல்யாணி (58) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.



இந்நிலையில், அவரது உடலை மீட்ட காவல்துறையினர் உடனடியாக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...