கோவை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெறும் கட்டிட பணிகள் 2023 மார்ச்-க்குள் நிறைவடையும் - அமைச்சர் எ.வ.வேலு.

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வரும் 6 தளங்களை கொண்ட கட்டிட பணிகள் குறித்து அமைச்சர்கள் எ.வ.வேலு, செந்தில்பாலாஜி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வரும் கட்டிட பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்

இந்த ஆய்வுக்கு பின் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம்பேசியதாவது, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜெய்க்கா நிதியுதவியுடன் தரைத்தளத்தில் சேர்ந்து ஆறு தளங்களை கட்டுகின்ற புதிய கட்டிடப் பணி நடைபெற்று வருகிறது.



குறிப்பிட்ட காலத்தில் கட்டி முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அடுத்த 2023 மார்ச் மாதத்திற்குள் இந்த பணிகள் நிறைவடைந்து விடும்.

கட்டுமான பணிகள் முடிந்து அடுத்த கட்ட பூச்சு வேலைகள் நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வரின் கரங்களால் இந்த கட்டிடம் திறக்கப்படும். தீக்காயத்திற்கு என்று தனி பகுதி கட்டப்படுகிறது. 8 ஆப்ரேஷன் தியேட்டர்கள் மற்றும்2 சிறு ஆபரேஷன் தியேட்டர்கள் கட்டப்படுகிறது.

அதேபோல மழைக்காலங்களில் மழை நீர் தேங்காமல் இருக்க தார் சாலைகள் மருத்துவமனை முழுவதும் முதல்வரின் கவனத்தின் மூலம் அமைக்கப்படும். அரசின் சார்பாக வளர்ச்சியை நோக்கி புதிதாக சாலைகளை அமைப்பதாக இருந்தாலும் சரி சாலைகளை விரிவுபடுத்துவதாக இருந்தாலும் நிலம் கையகப்படுத்துவது அத்தியாவசியம்.



நிலம் கையகப்படுத்துவது சாலை அமைப்பது என்றால் யாருக்காக. நகரப் பகுதியில் நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்கிறோம். அரசு திட்டங்கள் நிறைவேற்ற நிலம் கையகப்படுத்தி தான் ஆக வேண்டும்.

அதேபோல அரசு திட்டங்களை நிறைவேற்ற விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி திட்டத்தை அமைப்பதற்கான நடவடிக்கை தான் நடைபெறும்.

அன்னூரில் விவசாயிகள் தொழில் பூங்கா அமைப்பதற்கு எதிரான போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, அந்த துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசு-வின் கவனத்திற்கு இது கொண்டு செல்லப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...