சிறப்பாக வணிகம் செய்ய 'முக்தி’ நிலை அவசியம் - கோவை ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு அறிவுரை

அனைத்து செயல்களையும் முழு ஈடுபாட்டோடு செய்ய வேண்டும் என கோவை ஈஷா யேகா மையத்தில் நடைபெற்ற ஈஷா ‘இன்சைட்’ நிகழ்ச்சியில் வர்த்தக தலைவர்களுக்கு சத்குரு ஜகி வாசுதேவ் அறிவுரைகளை வழங்கினார்.



கோவை: ஈஷா லீடர்ஷிப் அகாடமி சார்பில் ‘ஈஷா இன்சைட்’ என்ற பெயரில் வர்த்தக தலைவர்களுக்கான தலைமைப் பண்பு மேம்பாட்டு நிகழ்ச்சி கோவை ஈஷா யோகா மையத்தில் நேற்று தொடங்கியது. நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய சத்குரு ஜகி வாசுதேவ், “நம் பாரத கலாச்சாரத்தில் முக்தியை வாழ்வின் குறிக்கோளாக கொண்ட ஒருவர் ஆன்மீக தேடல் உடையவராக பார்க்கப்படுவதாக கூறினார்.

இந்த தன்மையானது தொழில் முனைவோராக விரும்புபவர்களுக்கு மிகவும் அவசியம் என்று கூறிய அவர், ஏனெனில் தொழில்முனைவோர் ஒரு வர்த்தகம் செய்யும் நபர் மட்டுமல்ல என்றும் எப்போதும் தீர்வுகளையும், சாத்தியங்களையும் தேடி கொண்டு இருப்பவர் என தெரிவித்தார். இத்தகைய தேடல் இல்லாவிட்டால் ஒருவர் தொழில் முனைவோராக இருக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.



இந்நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளராக பங்கேற்ற ஓபன் நெட்வொர்க் ஃபார் டிஜிட்டல் காமர்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தம்பி கோஷி பேசியதாவது:

இன்றைக்கு நாம் அறிந்த ஆன்லைன் வணிகம் என்பது இன்னும் சில காலங்களில் பொருத்தமற்றதாக மாறும் என கூறினார். எனவே ஒவ்வொரு வகை விற்பனையாளரும் தங்கள் தயாரிப்புகளை ஒரு பொதுவான நெறிமுறையைப் பயன்படுத்தி திறந்த நெட்வொர்க்கில் விற்பனை செய்ய முயல வேண்டும் என தெரிவித்தார்.



அவரைத்தொடர்ந்து பேசிய HLE கிளாஸ்கோட் லிமிடெடட் நிறுவனத்தின் இயக்குநர் அமித் கல்ரா, ஒரு நிறுவனத்தின் மூன்று தூண்கள் - மக்கள், முதலீட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என கூறினார். நிறுவனம் மூடப்பட்டால், அது மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

வரும் 27-ம் தேதி வரை நடைபெறும் இந்த ‘இன்சைட்’ நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட வர்த்தக தலைவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளனர். குறிப்பாக, மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உள்ளிட்டோரும் ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.

ஈஷா லீடர்ஷிப் அகாடமி சார்பில் 11 ஆண்டுகளாக நடத்தப்படும் ‘இன்சைட்’ நிகழ்ச்சியில் பிரபல தொழிலதிபர்களான ரத்தன் டாடா, என்.ஆர். நாராயண மூர்த்தி, உள்ளிட்ட பலர் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...