கோவை கணபதி அருகே சாலையில் நடந்து சென்றவரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்கள் - பரபரப்பு..!

கோவை கணபதி அருகே சாலையில் நடந்து சென்ற நபரின் செல்போனை பறித்துச் சென்ற மர்ம நபர்களை சரவணம்பட்டி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


கோவை: திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் யுவராஜ், இவர் கோவை கணபதி நேரு நகர் பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து வீட்டிற்கு செல்போனில் பேசியவாறு நடந்து சென்றுள்ளார்.

அப்போது அவரை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரது செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக யுவராஜ் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலையில் நடந்து சென்றவரிடம் மர்ம நபர்கள் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...