கோவையில் லஞ்சம் வாங்கிய மின் வாரிய இளமின் பொறியாளர் உட்பட இருவர் கைது

மின் இணைப்பு பெற ரூபாய். 5000 லஞ்சம் பெற்ற மலுமிச்சம்பட்டி மின் வாரிய போர்மேன் சங்கர் கணேஷ் மற்றும் இளமின் பொறியாளர் சுப்பிரமணி ஆகியோரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர்.



கோவை: கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (28), இவர் மலுமிச்சம்பட்டி எம்.ஜி.பி நகரில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்காக தற்காலிக மின் இணைப்பு பெற கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளார்.



மேலும், இதற்காக இணைதளத்திலேயே ரூ.2,828 கட்டணம் செலுத்தியுள்ளார். மின் இணைப்பு வழங்குவது குறித்து கார்த்திக் மலுமிச்சம்பட்டியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் இருந்த இளமின் பொறியாளர் சுப்பிரமணியன் (50) என்பவரிடம் கேட்ட போது, மின் இணைப்பை வழங்க ரூ.7 ஆயிரம் லஞ்சமாக வழங்க வேண்டும் என கேட்டுள்ளார்.

அவ்வளவு பணம் இல்லை என கூறியதால், ரூ.5 ஆயிரம் கொடுத்தால் மின் இணைப்பு கொடுப்பதாக சுப்பிரமணியன் கூறியுள்ளார். மேலும், அந்த பகுதியில் மின் இணைப்பு கொடுப்பதற்கான பணிகள் முடிந்து இணைப்பு கொடுக்கப்பட்டதாக இணையதளத்திலும் பதிவேற்றம் செய்துள்ளனர்.

ஆனால் பணம் கொடுத்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும் என கூறியதால், கார்த்திகேயன் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீஸில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீஸார் கார்த்திகேயனிடம் இரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரம் பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை வழக்கம் போல மலுமிச்சம்பட்டி மின் வாரிய அலுவலகத்திற்குச் சென்ற கார்த்திக், சுப்பிரமணியனுக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து, அலுவலகத்தில் பணியாற்றும் போர்மேன் சங்கர் கணேஷ் என்பவர் மூலம் அந்த பணத்தை வாங்கியுள்ளார்.



இதையடுத்து அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் சங்கர் கணேஷ் லஞ்சம் வாங்கிய போது, அவரை கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் எஸ்.பி. திவ்யா தலைமையிலான போலீஸார் மலுமிச்சம்பட்டியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் வைத்து சங்கர் கணேஷ் மற்றும் இளமின் பொறியாளர் சுப்பிரமணி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மின் இணைப்பை வழங்க இவர்கள் லஞ்சம் கேட்டு வாங்கியது உறுதியானது. 



இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Newsletter

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...