மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்வது குறித்து மாநகராட்சி ஆணையர் (பொ) தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தலைமையில் கோவை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தெரிவிக்கையில், "கோவை மாநகராட்சியிலுள்ள ஐந்து மண்டலங்களான 100 வார்டு பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக குடிநீர் விநியோகப் பொறியாளர்கள் மற்றும் குடிநீர் விநியோக லாரி உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாநகராட்சியிலுள்ள அனைத்து வார்டு பகுதிகளிலும் எல்லா பகுதிகளுக்கும் சமமாக 12 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும், கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு கூடுதலாக டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. 

குடிசைப் பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை பொருத்தி லாரி மூலம் குடிநீர் விநியோகிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இதனால் கூடுதலாக லாரிகள் இயக்க வாய்ப்புள்ளது. 

குடிநீர் விநியோகம் சம்மந்தமாக பிப்ரவரி மாதத்திற்கான விநியோக செயல் திட்டம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. வீரகேரளம் அருகில் உள்ள வேடபட்டி குளத்தின் அருகில் ஆழ்குழாய் கிணறு அமைத்து நீர் பரிசோதனை செய்து குடிநீர் அற்ற பிற உபயோகங்களுக்கு பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஆகவே, பொது மக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், நகரப் பொறியாளர் (பொ) நடராஜன், செயற்பொறியாளர்கள் ஞானவேல், பார்வதி, ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர்கள் கருப்புசாமி, பிரபாகரன், கலாவதி, குடிநீர் விநியோக உதவி மற்றும் இளம்பொறியாளர்கள், குடிநீர் விநியோக லாரி உரிமையாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...