கோவை மாநகராட்சியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 3471 விளம்பர பதாகைகள் அகற்றம்- மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தகவல்

கோவை மாநகராட்சியில் கடந்த 2016 அக்டோபர் மாதம் முதல் 4.02.2017 வரை 5 மண்டலங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள 3471 விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டுள்ளது என கோவை மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தெரிவிக்கையில், "கோவை மாநகராட்சியில் 2016 அக்டோபர் மாதம் முதல் 2017 பிப்ரவரி 4 ம் தேதி வரை அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கிழக்கு மண்டலத்தில் 431 விளம்பர பதாகைகளும், மேற்கு மண்டலத்தில் 1496 விளம்பர பதாகைகளும், வடக்கு மண்டலத்தில் 528 விளம்பர பதாகைகளும், தெற்கு மண்டலத்தில் 28 விளம்பர பதாகைகளும் மற்றும் மத்திய மண்டலத்தில் 988 விளம்பர பதாகைகளும் ஆகமொத்தம் 3471 விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டுள்ளது.

அதாவது 2016 அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள 5 மண்டலங்களில் மொத்த 1791 விளம்பரப் பதாகைகளும், ஜனவரி 2017-ல் 5 மண்டலங்களில் மொத்த 577 விளம்பரப் பதாகைகளும், 01.02.2017 முதல் 4.02.2017 வரை அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள 5 மண்டலங்களில் 203 விளம்பர பதாகைகளும் என மொத்தம் இதுவரை 3471 விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டுள்ளது." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தெரிவித்துள்ளார்.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...