ஸ்ரீ கிருஷ்ணா கலை கல்லூரியில் நடைபெற்ற சர்வதேச கருத்தங்கம் நிறைவு பெற்றது


அகில இந்திய கல்லூரி முதல்வர்கள் சங்கம் மற்றும் கோவை குனியமுத்தூரில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து 18-வது சர்வதேச கருத்தரங்கினை "தேசிய வளர்ச்சி மற்றும் சர்வதேச முன்னேற்றத்தில் உயர் கல்வியின் பங்கு" என்னும் தலைப்பில் இக்கல்லூரி வளாகத்தில் நடத்தியது.



இக்கருத்தரங்கினை தமிழக அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்ர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தனர்.



இதில், இந்தியா முழுவதுமிருந்து 300-க்கும் மேற்பட்ட கல்லூரிகளின் முதல்வர்கள் பங்கேற்று, 100-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

இக்கருத்தரங்கின் நிறைவு விழா ஞாயிறன்று ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினர்களாக கோவா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் முனைவர் வருக்சாகினி சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார். மேலும், கோவை அவினாசிலிங்கம் பல்கலை கழகத்தின் வேந்தர் முனைவர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார்.



மேலும், இந்நிகழ்வில் அகில இந்திய கல்லுரி முதல்வர்களின் அமைப்பின் தலைவர் சுபாஷ் பிரம்பாட், துணைத் தலைவர் பி.சேகர், இக்கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி, முதன்மை நிர்வாக அலுவலர் முனைவர் சுந்தரராமன், முதல்வர் பாபாஞானக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதைத்தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் கோவா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் பேசிய போது, கல்வியின் மாற்றத்தில் கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்கினை எடுக்க வேண்டும். காலத்திற்கு ஏற்ற கல்வித் திட்டங்களை அரசுடன் இணைந்து உருவாக்க வேண்டும்.

மாணவர்களின் வேலைத் திறனை உயர்த்தி வேலைவாய்ப்பினை கொடுக்க வேண்டும். உயர்கல்வியின் சதவிகிதத்தினை நாம் உயர்த்த வேண்டும் எனக் கூறினார்.

அவினாசிலிங்கம் பல்கலைக் கழகத்தின் வேந்தர் பேசிய போது, படித்த கல்வி மனிதர்களை பண்புள்ளவர்களாக உருவாக்க வேண்டும். வேலைத் திறன், தொழில்நுட்பங்களை போதிப்பதுடன், வாழ்க்கை கல்வியினை கற்றுக்கொடுக்க வேண்டும். கலாச்சார கல்வி அனைத்து பண்புகளையும் கற்றுக்கொடுக்கும் எனக் கூறினார்.

ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழமங்களின் நிர்வாக அறங்காவலர் கூறியபோது, கற்றலில் தொழில்நுட்பத்தினை அதிகமாக பயன்படுத்த வேண்டும். நவீன வளர்ச்சிக்கு உட்பட்டு மற்றும் எதிர்காலத்தினை கருத்தில்கொண்டு கல்வித் திட்டத்தில் மாற்றங்களை தொழில்நிறுவனங்களுடன் இணைந்து கொண்டு வர வேண்டும். இதில், மாணவர்களை நேரடியாக பயிற்சி எடுத்து கற்கும் முறையினை அதிகமாக கொண்டு வரவேண்டும் எனக் கூறினார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...