வருமான வரி வரம்பை 8 லட்சமாக அறிவிக்க கோரி கோவையில் த.பெ.தி.க சார்பில் ஆர்ப்பாட்டம்

உயர்வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டில் ஆண்டு வருமானம் 8 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், வருமான வரி வரம்பை அதற்கு இணையாக உயர்த்த கோரி த.பெ.தி.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..



கோவை:பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது.



இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டின்படி, உயர்சாதி ஏழைகளுக்கான ஆண்டு வருமானமாக 8 லட்சம் ரூபாயை அளவுகோலாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பிற்கு ஆதரவாகவும், எதிராகவும் நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆதரவளிக்காத அமைப்புகள், இந்தியாவில் வருமான வரி வரம்பு வருடத்திற்கு 5 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றம் கூறியது எவ்வாறு நியாயம் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் இந்தியாவில் வருமான வரி வரம்பை 8 லட்சமாக அறிவிக்க கோரியும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள வருமான வரி அலுவலகம் முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வருமான வரி உச்சவரம்பை 8 லட்சமாக அறிவிக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கு.இராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி,முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரின் ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.





Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...