கோவை மத்திய சிறை வளாகத்திலிருந்த சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டது தொடர்பாக ஜெயிலர் சிவராஜன் அளித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை நகரின் மத்திய பகுதியில் சிறைச் சாலை அமைந்து உள்ளது. இங்கு ஆயிரக் கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.
சிறையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குடியிருப்பு அதே வளாகத்தில் அமைந்து உள்ளது. இந்நிலையில் கோவை மத்திய சிறைச் சாலையின் ஜெயிலர் சிவராஜன் போலீசார் உடன் சிறை வளாகத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அங்கிருந்த சந்தன மரம் ஒன்று வெட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிரசி அடைந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலிஸார் பாதுகாப்பு அதிகமாக உள்ள இடங்களிலேயே இவ்வாறான திருட்டு, அத்துமீறல் சம்பவங்கள் நடப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.