கோவை கார் வெடிப்பு:வழக்கு என்.ஐ.ஏ-விடம் ஒப்படைக்கப்பட்டாலும் காவல்துறை தொடர்ந்து கண்காணிப்பு

கோவை கார் வெடிப்பு குறித்த விசாரணை கோப்புகள் அனைத்தும் என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்கப்பட்டாலும் மாநகர காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வருவதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல்.



கோவை: கோவை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் குற்றவாளிகள் கண்டறிதலுக்கு ட்ரோன் கேமரா பயன்படுத்துவது தொடர்பாக காவலர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி துவங்கியது.

காந்திபுரம் பகுதியில் நடைபெறும் இந்த முகாமை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். டிஜி இன்ஸ்டிட்யூட் ஆஃப் ட்ரோன்ஸ் நிறுவனத்தின் ஐந்து வல்லுநர்களை கொண்டு கோவை மாநகர காவல்துறையில் பணிபுரியும் 20 காவலர்களுக்கு முதல் கட்டமாக இரண்டு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சி முகாமை துவக்கி வைத்த பின்னர், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் பேசியதாவது, கோவை மாநகரில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் வாகனங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளை கண்காணிப்பதற்கு ட்ரோன் கேமராக்கள் அதிக அளவில் பயன்படுகிறது.

கோவை மாநகர காவல்துறையில் ஏற்கனவே ஒரு ட்ரோன் கேமரா உள்ள நிலையில் அதில் புதுப்பிக்க வேண்டிய அப்ளிகேஷன்கள் மற்றும் புதிய வகையிலான நவீன ட்ரோன்களை கையாளும் விதம் ஆகியவை குறித்து காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் புலனாய்வு செய்த அனைத்து கோப்புகளும் தேசிய புலனாய்வு முகமை வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.

ஆனாலும் மாநகர காவல் துறை அப்பகுதிகளில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து கோவைக்கு பாதுகாப்பிற்காக வரவழைக்கப்பட்ட காவல்துறையினர் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாநகர காவல் துறையினர் அனைத்து இடங்களிலும் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேசினார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...