காற்றாலை மூலம் கடந்த 8 மாதத்தில் 10,000 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி - காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கம்

தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் முதல் அக்டோபர் வரை 10,000 மில்லியன் யூனிட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது என இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கம் தகவல்.


கோவை: சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாதது, மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காதது உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை சூரிய ஒரி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறை கொண்டுள்ளது.

இதன் காரணமாகவே மத்திய மற்றும் மாநில அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி துறையின் வளர்ச்சிக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் 8,500 மெகாவாட் மின்உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளன.

ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை காற்று பருவகாலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் தமிழகத்தின் தினசரி மொத்த மின்தேவையில் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மிக அதிகம் பங்களிக்கும்.

இதுதொடர்பாக இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கஸ்தூரி ரங்கையன் கூறியதாவது,

கடந்த காலங்கள் போல் இல்லாமல் இன்று காற்றாலை, சூரியஒளி உள்ளிட்ட ஆற்றல் உற்பத்தித்துறை மீது மக்கள் அதிக விழிப்புணர்வு பெற்றுள்ளனர். எதிர்வரும் காலங்களில் மின்தேவையை பூர்த்தி செய்வதில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறை மிக முக்கிய பங்கு வகிக்கும்.

இந்த ஆண்டு காற்று பருவகாலம் மார்ச் 15ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 31ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு காற்று பருவ காலத்தில் மொத்தம் 10 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

மின்சாரத்தை வீணடிக்காமல் தமிழக மின்வாரியம் உரிய முறையில் பெற்றுக் கொண்டது. ஏற்கனவே தமிழக அரசு சார்பில் பெறப்பட்ட மின்சாரத்துக்கு நிலுவை வைக்கப்பட்டுள்ள தொகை, இதுவரை இரண்டு தவணைகளாக மின் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள தொகையும் தொடர்ந்து விநியோகம் செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையை காற்றாலை மின்உற்பத்தியாளர்கள் சங்கம் வரவேற்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...