அண்ணாமலை கைதை கண்டித்து கோவையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் - பாஜக-வை சேர்ந்த 257 பேர் மீது வழக்குப்பதிவு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவை சித்தாபுதூர் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி உட்பட 257 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.



கோவை: திமுக அரசை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி அண்ணாமலை உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவை சித்தாபுதூர் சாலையில் பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காட்டூர் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இந்நிலையில் அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி பாஜக-வை சேர்ந்த 257 பேர் மீது IPC 143,மற்றும் 341 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...