ஈர நெஞ்சம் அறக்கட்டளை சார்பில் உலக புற்றுநோய் தினம் அனுசரிப்பு


உலக புற்றுநோய் தினமாக இன்று பிப்ரவரி 4, அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் இந்த நாள் மருத்துவ உலகில் மிக முக்கியமான தினமாக பார்க்கப்படுகின்றது. போதிய விழிப்புணர்வு பொதுமக்களிடையே இருந்தால் நம்மை பாதிக்கும் மூன்றில் ஒரு பங்கு புற்றுநோய்களை கட்டுப்படுத்த முடியும் என்கிறது ஒரு ஆய்வறிக்கை புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் அனுபவிக்கும் வலி எதனினும் ஒப்பிடமுடியாதொன்று, நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறுகிய காலத்தில் உயிரிழக்கும் நிலைக்கு சென்றாலும் அதற்குள் அவர்கள் வாழும் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகவும் அவர்களை முழுமையானதாகவும் திருப்திப்படுத்தியிருக்க வேண்டும் என்றும், வலிகளை மறந்து அவர்கள் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்றே ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள்.



 

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களை கண்டு பரிதாப்படுவது அவர்களுக்கு முக்கியம் அல்ல மாறாக அன்பும், புரிந்துணர்வும், ஆதரவும் தேவைப்படுகிறது. அவர்கள் சாதாரண மனிதர்கள் போன்று வாழவே ஆசைப்படுகிறார்கள். இந்த நிலையிலேயே நோயுற்ற ஒவ்வொரு வாழ விரும்புகிறார்கள். கோவை அரசு மருத்துவமனையில் தற்பொழுது 5திற்கும் மேற்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் குழந்தைகளுக்கு ஆதரவாகவும் அவர்களை மகிழ்விக்கவும் ஈரநெஞ்சம் அறக்கட்டளை அக்குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பிய புது உடைகள், விளையாட்டு பொருட்கள், இனிப்புகள் என பரிசளித்து அவர்களை மகிழ்வித்து குழந்தைகளின் முகத்தில் புன்னகையை பூக்க செய்தது.



மேலும் குழந்தைகள் பிரிவில் மற்ற நோய்க்காக சிகிச்சை பெரும் குழந்தைகளுக்கும் இனிப்பு விளையாட்டு பொருட்களை ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது. இதற்காக ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்கு நல்ல உள்ளங்களுக்கு அறக்கட்டளை சார்பாக நன்றியை தெரிவித்தது.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...